தக்சின் கனடா: வித்தியாசமாக யோசிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு உதாரணமான ஒரு செய்தி தான் இது. இந்தியாவில் தற்போது வெளிநாட்டை சேர்ந்த பழங்கள் மக்கள் விரும்பி உண்ணக்கூடியமையாக மாறியுள்ளன. அவற்றை நாம் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அப்படி ஒன்றுதான் டிராகன் பழம்.
கர்நாடகாவை சேர்ந்த ஒரு விவசாயி டிராகன் பழத்தினை சாகுபடி செய்து அதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார். தக்சின் கனடா பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் டிராகன் பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் அண்மைக்காலமாக டிராகன் பழங்களை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை இறக்குமதி செய்வதற்கு பதிலாக நாமே ஏன் விளைவிக்க கூடாது என்ற யோசனை வந்துள்ளது.

உடனே விவசாயி ஆண்டனி தனக்கு சொந்தமாக இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே ரப்பர் மரங்களை வளர்த்து வந்தால் அவற்றை வெட்டி எறிந்து விட்டு தற்போது நான்கு ஏக்கரிலும் டிராகன் பழங்களை சாகுபடி செய்து வருகிறார். கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திலேயே இவருக்கு நல்ல சாகுபடி கிடைத்துள்ள தாம். தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்திலிருந்து மரங்களை வெட்டி நிலத்தை சமன் செய்து செடிகளை நட்டு அவற்றுக்கு சொட்டு நீர் பாசன வசதிகளை செய்து சுற்றிலும் வேலி அமைப்பது என இதுவரை தான் 40 லட்சம் ரூபாயை செலவு செய்திருப்பதாக கூறுகிறார்.
ஆனால் தன்னுடைய முதல் அறுவடையிலேயே இவருக்கு கிட்டத்தட்ட 30 டன்கள் டிராகன் பழம் கிடைத்ததாம். மற்ற பயிர்களைப் போல டிராகன் பயிர்களுக்கு பெரிய அளவிலான பராமரிப்பு தேவை இருக்காது. குறிப்பிட்ட நேரத்திற்கு தண்ணீர் மற்றும் போதிய உரம் ஆகியவை கிடைத்தால் போதும், அதுவே தானாக வளர்ந்து விடும். டிராகன் செடிகளை வாங்கி நட்டால் இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு பழங்கள் கிடைக்க ஆரம்பித்து விடும் எனக்கு கூறுகிறார்.
இவர் தன்னுடைய நிலத்தில் டிராகன் பழம் மட்டுமில்லாமல் ரம்புட்டான், அன்னாசி பழ மரங்களையும் வளர்க்கிறார். பெங்களூரு, தமிழ்நாடு, கேரளா, மங்களூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இவரிடமிருந்து நேரடியாக டிராகன் பழங்களை கொள்முதல் செய்கிறார்களாம். இவர் ஒரு கிலோ டிராகன் பழத்தை 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இவரிடமிருந்து வாங்கிச் செல்லக்கூடிய வியாபாரிகள் ஒரு கிலோ டிராகன் பழத்தை 350 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications