சிலர் ஒரு குறிப்பிட்ட துறை குறித்து படித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் சாதித்தது வேறு துறையாக இருக்கும். இதை இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் பி.காம் படித்து இருப்பார். ஆனால் மோட்டார் மெக்கானிக்கல் துறையில் வேலை பார்த்து நன்றாக சம்பாதிப்பார். அதே போன்ற ஒரு நபர்தான் அஜித் சிங்.
படித்தது என்னமோ கெமிக்கல் என்ஜினீயரிங் ஆனால் சாப்ட்வேர் துறையில் கொடி கட்டி பறக்கிறார். உத்தர பிரதேசத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அஜீத் சிங். இவரது தாத்தா பாட்டி விவசாயிகள். இவரது அப்பா விவசாயத் துறையில் ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் வேதியியலாளர்.

தந்தையின் பணி காரணமாக உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில் படித்து வசித்தவர். தந்தையின் ஆய்வகங்களுக்கு சென்று வந்ததால் ரசாயனங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதன் தாக்கல் அவரது படிப்பிலும் எதிரொலித்தது. ஐ.ஐ.டி. கான்பூரில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் முதல் இடம் பிடித்தார். பின்னர் கொல்கத்தாவில் எம்.பி.பி. பட்டம் பெற்றார்.
இதை தொடர்ந்து மேலாண்மை ஆலோசனை பணியில் சேர்ந்தார். அந்த பணி அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. நிஜ உலக அனுபவம் இல்லாமல் பவர்பாயிண்ட் விளக்க காட்சிகளை உருவாக்குவதில் அதிருப்தி அடைந்தார். அந்த பணியை வெறுத்தார்.
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள i2 டெக்னாலஜிஸ் என்ற சப்ளை செயின் திட்டமிடல் சாப்டவேரில் கவனம் செலுத்தி வரும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஹனிவெல் நிறுவன வேலைக்காக அமெரிக்கா சென்றார். அங்கும் அவர் நீண்ட காலம் வேலை பார்க்கவில்லை. தொழில்நுட்ப சார்ந்த பணியுடன் இருக்க விரும்பினார். இதனால் ஆரக்கிள் நிறுவனத்தின் சேர்ந்தேன். பின்பு அதிலிருந்து விலகி புதிய நிறுவனத்தை தொடங்க எண்ணினார்.
இதனையடுத்து 2009ல் சாப்ட்வேர், கிளவுட் சேவைகள் வழங்கும் நுடானிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டு வந்தது. இந்நிலையில் 2012ல் வணிக நுண்ணறிவு பகுப்பாய்வு தேடல் சாப்ட்வேரை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமான தாட்ஸ்பாட் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் நுடானிக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை சுமார் 41.56 டாலராக உள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.50,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தாட்ஸ்பாட் நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.33,000 கோடியாகும். அஜீத் சிங் பேட்டி ஒன்றில், எங்களிடம் தலைமையகம் இல்லாத கலாச்சாரம் உள்ளது. நான் தலைமையகம் வார்த்தை வெறுத்தேன். ஏனெனில் அத்தியாவசிய பணிகள் தலைமையகத்தில் மையப்படுத்தப்படுகின்றன என்ற தவறான எண்ணத்தை தவிர்க்க விரும்பினேன் என தெரிவித்தார். இணைநிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் உள்பட கூட்டு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர் விவேகமான அணுகுமுறையை பேணுகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications