வேலைவாய்ப்பின்மை ஒருவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் என்பதை புனேவைச் சேர்ந்த ஒருவர் நிரூபித்திருக்கிறார். புனேவின் புரந்தர் தாலுகாவில் உள்ள ஜெஜூரி கிராமத்தில் வசிப்பவர் தான் மங்கேஷ் பிரகாஷ் லாவண்டே. இவர் வாகன உற்பத்தி நிறுவனமான தலேகான் ஆலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியதன் காரணமாக பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அப்படி வேலை இழந்தவர் தான் மங்கேஷ் பிரகாஷ். ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர், தலேகான் ஆலை மூடப்படுவதற்கு முன்பு 10 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
மங்கேஷின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக சீத்தாப் பழங்களை பயிரிட்டு வந்தது. மங்கேஷும் தங்கள் குடும்பத்தின் 2 ஏக்கர் நிலத்தில் 400 சீத்தாப்பழம் மரக்கன்றுகளை நட்டு விவசாயத்தில் இறங்கினார். கோவிட் 19 காரணமாக சில நாட்கள் வீட்டிலேயே இருந்தார். மேலும் தனது தந்தையின் சீத்தாப்பழத் தோட்டம் ஏன் அதிக அளவில் விளைச்சலை தரவில்லை என்பதை ஆராயத் தொடங்கினார்.

விவசாயம் என்பது ஒரு அறிவியல்.. எந்த சத்துக்களை எப்போது சேர்க்க வேண்டும்? எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? ஒரு செடிக்கு நோய் தடுக்கும் சக்தி எப்போது கிடைக்கும்? எவ்வளவு உரம் தேவைப்படும்? என்பதைத் தெரிந்து கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்பதே மங்கேஷன் கருத்து.
சீத்தா பழங்கள் நல்ல விளைச்சளைத் தரவில்லை என்பதை கண்டறிந்த மங்கேஷ் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானார். 2021-ஆம் ஆண்டில் மண் பரிசோதனை குறித்த இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார். அப்போது அங்கிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ளான மண் பரிசோதனை இயந்திரத்தையும் வாங்கினார். அதை வாங்கிக் கொண்டு வந்து தங்களுடைய பண்ணையில் இருந்த மண்ணை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போதுதான் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் ஆர்கானிக் கார்பன் ஆகியவை குறைவாக இருப்பதை கண்டறிந்தார். இந்த இயந்திரத்தை வைத்து மற்ற விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை சேவைகளை வழங்க மங்கேஷ் முடிவு செய்தார்.
நுண்ணூட்டச் சத்து மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்கள் ஆகியவை மண்புழு உரத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட மங்கேஷ் மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார். மண்புழு உரத்தில் தாமிரம், இரும்பு, மாங்கனிஸ், துத்தநாகம், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சல்பர் மற்றும் போரான் போன்ற வளமான தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாக மண்புழு உரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மங்கேஷ் தானே அதை தயாரிக்க முடிவு செய்தார்.
மண்புழு உரம் தயாரிக்க மங்கேஷ் ரூ. 15 லட்சத்தை முதலீடு செய்தார். பசுவின் சாணத்தில் இருந்து வெளியேறும் கூடுதல் நீரை மீண்டும் ஒரு தொட்டிக்கு அனுப்பி உரம் தயாரிக்க பயன்படும் வகையில் நிலத்தடி குழாய்களை அமைத்தார். மேலும் மங்கேஷ் மண்புழு உரம் தயாரிப்பிற்காக அவுரங்காபாத்தில் உள்ள ஒரு சப்ளையரிடமிருந்து மண்புழுக்களை வாங்கி 30 X 4 X 1 அடியில் 20 பெட்டுகளை உருவாக்கினார். மண்புழு உரத்திற்கு தேவைப்படும் மாட்டு சாணம், இலைகள், பயிர் எச்சங்கள், காய்கறி கழிவுகள் போன்ற பிற கரிம பொருட்களையும் பயன்படுத்தினார். 2 மாதங்களுக்கு ஒரு முறை மங்கேஷ் 50 முதல் 60 டன் மண்புழு உரங்களை தயார் செய்கிறார். 50 கிலோ எடையுள்ள மூட்டையை 600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
அவர் மண்புழு உரத்திலிருந்து தயாரிக்கப்படும் வெர்மிவாஷ் என்ற உரத்தையும் தயாரிக்கிறார். அதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயிர்களுக்கு நன்மை பயக்கும் பிறப்பொருட்களும் உள்ளன. 1 லிட்டர் தண்ணீரில் வெறும் 10 மில்லி வெறும் வாஷ் கலந்தால் போதும். தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும். இதை மண்ணில் சேர்க்கலாம் அல்லது செடிகளில் தெளிக்கலாம் என்கிறார் மங்கேஷ்.
சமீபத்தில் மண்புழு உரத் துகள்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதை அவர் "பூஸ்டர்" என்று குறிப்பிடுகிறார். இந்த பூஸ்டர் துகள்களில் மண்புழு உரம், பருத்தி விதை, புண்ணாக்கு போன்ற பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 40 கிலோ எடையுள்ள இந்த பூஸ்டர் பேக்கை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார். அதோடு சீத்தாப்பழ விற்பனையும் சேர்த்து செய்து வருகிறார் மங்கேஷ். தற்போது இவருடைய 400 சீத்தாப்பழ மரங்களும் நல்ல விளைச்சலைத் தருகின்றன.
சுமார் 4 ஆண்டுகள் ஆன நிலையில் நடப்பு சீசனில் 10,000 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. சீதாப்பழத்தின் விலை தேவையை பொறுத்து 60 முதல் 250 ரூபாய் வரை இருக்கும். இந்த ஆண்டு இவருடைய நிகர வருமானம் செலவுகளை எல்லாம் கழித்த பின்னர் ரூ.2 லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications