நாட்டில் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM - KISAN)" திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகள் ஆண்டு வருமானத்தைப் பெற முடியும். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பட்ஜெட் தொடர்பான முன் விவாதத்தின் போது விவசாயிகள் சேர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் PM கிசான் திட்ட உதவித்தொகையை 6,000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாக உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்ஜெட் தொடர்பான முன் விவாதத்தின்போது, விவசாயம் சார்ந்த நிபுணர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். மத்திய பட்ஜெட்டில் பிஎம்-கிசான் தவணைத் தொகையை ரூ. 6,000 ரூபாயிலிருந்து ரூ. 8,000-ஆக உயர்த்துமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 2024 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வேளாண்மை ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம்: விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நிதி உதவி வழங்குவதற்க்காக, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதம மந்திரி கிசான் திட்டம் தொடங்கப்பட்டது.
PM கிசான் திட்டத்தின் பலன்கள்: பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளின் குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ. 6,000 பெறுகின்றன. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் 3 தவணைகளில் நேரடி பரிமாற்றம் (DBT) மூலம் பணம் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், இது வரை மொத்தமாக ரூ.3.04 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை PM கிசான் திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.3.24 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
தகுதியான விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் 17வது தவணை ஜூன் 18-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது. இந்த தவணையின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
PM-KISAN திட்டம் என்பது நாட்டில் உள்ள அனைத்து நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை வழங்கும் ஒரு மையத் திட்டமாகும். விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் உற்பத்தி செலவுகளை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இடைக்கால பட்ஜெட் ஆவணங்களின்படி, 2024-25 நிதியாண்டில் விவசாய அமைச்சகத்திற்கு அரசாங்கம் ரூ.1.27 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது, இது நடப்பு நிதியாண்டை விட சற்று அதிகமாகும்.


Click it and Unblock the Notifications