பேஷன் நிறுவனமான பலென்சியாகாவின் தயாரிப்புகள் எப்போதும் வித்தியாசமாக இருக்கும். மேலும் விலையும் அதிகமாகத் தான் இருக்கும். இருப்பினும், பலென்சியாகா தயாரிப்புகளை வாங்குவதற்கு என்றே ஒரு மக்கள் கூட்டம் உள்ளது. மேலும், அடுத்து எப்போது புதிய பேஷன் தயாரிப்பை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று காத்திருப்பவர்களும் உள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் உலகம் முழுவதும் சிறப்பாக உள்ளது.
பலென்சியாகா என்ற ஆடம்பர பிராண்ட் நிறுவனம் சமீபத்தில் இரு பாலரும் அணியும் வகையில் டவல் ஸ்கர்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. துண்டு மாதிரி இருக்கும் இந்த டவல் ஸ்கர்ட்டில் மறைவாக வைக்கப்பட்டுள்ள கொக்கியுடன் சரிசெய்யக்கூடிய பெல்ட்டும் உள்ளது. இதன் விலை 925 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 77,000 ரூபாயாகும். ஒரு டவல் ஸ்கர்ட் விலை இவ்வளவா என்று பலரின் மத்தியில் ஒரு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலென்சியாகாவின டவர் ஸ்கர்ட் விலை சமூக ஊடகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் எக்ஸில், நுகர்வோர் நடத்தை குறித்த உங்கள் சமூக சோதனைகள் அவமரியாதை மற்றும் மூர்க்கத்தனமானவை என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் பிராண்ட்டுக்கு ஆதரவாக ஒருவர், பொருளாதாரத்தில் அவர்கள் உண்மையான தேவை வளைவை கண்டுபிடித்துள்ளனர் என்று நாங்கள் கூறுவோம் என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன் இந்நிறுவனம் ஒரு குப்பை பையினை விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் விலையை கேட்டால் ஷாக்காகி விடுவீர்கள். நீங்க பயப்படுற அளவுக்கு விலை ஒன்னும் அதிகம் விலை, ஒரு குப்பை பை விலை ரூ.1.42 லட்சம்தான். பலென்சியாகா பிராண்ட் தயாரிப்புகளின் விலையை பற்றி தெரிந்தவர்களுக்கு இது சாதாரணமாக தெரியும்.


Click it and Unblock the Notifications