நேற்று முதல் புதிய ஃபாஸ்டேக் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 28-ஆம் தேதி அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன்படி டோல் பிளாசாவில் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்ட நேரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஃபாஸ்டேக் பணம் செலுத்துதல் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஃபாஸ்டேக் என்றால் என்ன?: ஃபாஸ்டேக் என்பது டிஜிட்டல் கட்டண முறையாகும். இதன் மூலம் பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய முடியும். ரேடியோ ஃப்ரீக்குவன்சி ஐடென்டிஃபிகேசன் டெக்னாலஜியை (RFID) பயன்படுத்தி ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் தானாகவே கழிக்கப்படுகிறது. அதற்காக வாகனத்தின் கண்ணாடியில் ஒரு ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

வாகனம் டோல் பூத்தை நெருங்கும்போது, RFID சென்சார்கள் டேகை ஸ்கேன் செய்து, இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து கட்டணத்தை வசூலிக்கும். பின்னர் பேரியர் திறக்கப்பட்டு, வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.
நேற்று முதல் அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் மாற்றங்கள்: நேற்று முதல் புதிய ஃபாஸ்டேக் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட்லிஸ்டில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது டோல் பிளாசாவை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு முன் பேலன்ஸ் குறைவாக இருந்தாலோ டோல் கட்டணம் நிராகரிக்கப்படும்.
அதோடு டேக் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு 10 நிமிடங்களுக்குள் ஒரு ஃபாஸ்டாக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அப்போதும் கட்டணம் நிராகரிக்கப்படும். இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் கம்ப்யூட்டர் எரர் கோட் 176 உடன் பரிவர்த்தனையை நிராகரிக்கும். மேலும் இதற்கு அபராதமாக வாகனத்திற்கு இரண்டு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்பெல்லாம், ஃபாஸ்டேக்கில் பணம் குறைவாக இருந்தால் அல்லது அது செயலிழந்திருந்தால், டோல் பூத்தை நெருங்கும் நேரத்தில் ரீசார்ஜ் செய்வது கடினமாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு வாகனம் டோல் பூத்தை அடைவதற்கு 70 நிமிடங்களுக்கு முன்பே, அதன் ஃபாஸ்டேக் நிலையைச் சரி செய்து கொள்ளவும், ரீசார்ஜ் செய்யவும் முடியும். அதாவது, உங்கள் ஃபாஸ்டேக் சரியாக வேலை செய்கிறதா, அதில் போதுமான பணம் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே சரி செய்து கொள்ளலாம்.
ஒருவேளை, உங்கள் ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாததால் அல்லது வேறு காரணத்தால் டோல் கட்டணம் செலுத்த முடியாமல் போனால், கவலைப்படத் தேவையில்லை. அந்த பரிவர்த்தனை முயற்சி தோல்வியடைந்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்தால், இரட்டை அபராதம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.
அதுவே டோல் ரீடரைக் கடந்து 15 நிமிடங்களுக்கு மேல் பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டால் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். ஒரு ஃபாஸ்டேக் ஒரு டோல் பிளாசாவை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு மேல் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தால், கடைசி நேரத்தில் ரீசார்ஜ் செய்வது உதவாது. எனவே வாகன உரிமையாளர்கள் இந்த புதிய நடைமுறையை கருத்தில் கொண்டு பயணிப்பது தேவையற்ற செலவுகளை குறைக்க உதவும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications