சென்னை: இன்றெல்லாம் அனைவரின் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் உள்ளன. போகும் இடங்களுக்கு எல்லாம் ஆதார் கார்டை எடுத்துச் செல்வது, சிலருக்கு சிரமமாக இருக்கலாம். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது சில நேரங்களில் அது தொலைந்து போகும் அபாயம் கூட ஏற்படும். இதனால் உங்கள் மொபைலிலேயே ஒரு காபி ஆதார் கார்டை டவுன்லோட் செய்து வைப்பது நல்லது. இந்தப் பதிவில் விரைவில் ஆதார் கார்டை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்
இ-ஆதார் கார்டு என்பது ஆதார் அட்டையின் டிஜிட்டல் பதிவாகும். இது நீங்கள் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்லும்போது, எப்படி செல்லுபடி ஆகிறதோ அதே போலவே செல்லுபடி ஆகும் ஒன்றாகும். எனவே, டவுன்லோட் செய்து இருப்பதும் கையில் வைத்திருப்பதும் வெவ்வேறு என்று நீங்கள் குழம்ப வேண்டாம். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் அரசாங்க தேவைகளுக்காக, இதுபோன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் முகவரிக்கான சான்றாக ஆதார் செயல்படுவதால் டிஜிட்டல் வடிவத்தில் இருப்பது ஏக வசதியை வழங்குகிறது. குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு.

ஆதார் கார்டை வேகமாக டவுன்லோட் செய்யும் முறைகள்
UIDAI இணையதளம்:
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: 'Aadhaar Download' என்ற பகுதிக்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: தேவையான விவரங்களுடன் உங்கள் ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடியை என்டர் செய்யவும்.
இதன் மூலம், உங்கள் இ - ஆதாரை உடனடியாக டவுன்லோட் செய்ய முடியும்.
mAadhaar செயலி:
ஸ்டெப் 1: UIDAI உருவாக்கிய mAadhaar செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: உங்கள் ஆதார் விவரங்களை என்டர் செய்து, உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்யவும். mAadhaar செயலியில், ஆதார் சேவைகளை ஆஃப்லைனில் பெறவும் அனுமதிக்கிறது.
டிஜிலாக்கர் (DigiLocker):
ஸ்டெப் 1: இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் தளமான, டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம். அதற்கு உங்கள் ஆதார் நம்பரை, உங்கள் டிஜிலாக்கர் அக்கவுண்ட்டுடன் இணைக்க வேண்டும்.
ஸ்டெப் 2: உங்கள் இ-ஆதார் மற்றும் பிற ஆவணங்களை பாதுகாப்பாக டவுன்லோட் செய்ய இந்த அரசாங்க இணையதளம் உங்களுக்கு உதவும்.
இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல்: சில வங்கிகள், தங்கள் இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல்கள் மூலம் இ-ஆதார் டவுன்லோட் சேவையை வழங்குகின்றன. உங்கள் இன்டர்நெட் பேங்க் அக்கவுண்டில் உள் நுழைந்து ஆதார் பகுதிக்குச் சென்று டிஜிட்டல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்யலாம். இது பேங்கின் அதிகாரப்பூர்வ செயலியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
உங்கள் இ-ஆதார் கார்டை விரைவாக டவுன்லோடு செய்வதோடு உங்களுடைய கடமை முடியாது. அதன்பிறகு நீங்கள் சில பாதுகாப்பு வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
1. பின்: அங்கீகரிக்கப்படாத நபர்கள், உங்கள் ஆதார் கார்டை டவுன்லோட் செய்யாமல் இருக்க ஸ்ட்ராங் பாஸ்வோர்ட் கொண்டு உங்கள் டிஜிட்டல் ஆதார் PDF-ஐ பாதுகாக்கவும்.
2. விவரங்களைச் சரி பார்க்கவும்: நீங்கள் இ-ஆதார் கார்டை டவுன்லோட் செய்த பிறகு, அதில் உள்ள விவரங்கள், உங்களுடைய விவரங்களா.. என்பதைச் சரி பார்க்கவும். அப்படி ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவற்றை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும்.
UIDAI இணையதளம், mAadhaar ஆப், DigiLocker மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போர்டல்கள் போன்ற பல வழிகளில் உங்கள் இ-ஆதார் கார்டை டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெறலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications