அப்பா ஐஐடி ப்ரொஃபசர், மகன் சயின்டிஸ்ட்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இன்று உலகளவில் அறியப்படும் பல முன்னணி பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சிஇஓ-க்கள் என பலரும் தங்களுடைய பணியில் வேகமாக உயர முக்கியமான காரணமாக இருப்பது அவர்களுடைய குடும்பம் தான். தாய் எட்டடி தூரம் பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் என்பதற்கு ஏற்ப வெற்றப்பெற்றவர்கள் பலரின் பெற்றோர் முக்கிய இடத்திலும் அல்லது உயர்வான இடத்திலும் இருந்துள்ளனர்.

சுந்தர் பிச்சை-யின் தந்தை முன்னணி நிறுவனத்தில் பணியாற்றியது மட்டும் அல்லாமல் சிறிய அளவில் சொந்தமாக ஒரு தொழிற்சாலை வைத்திருந்தார். சத்ய நாடெல்லா-வின் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி, இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே போனாலும் எவ்விதமான பின்புலமும் இல்லாமல் உயர்ந்தவர்களும் சிலர் உள்ளனர்.

 அப்பா ஐஐடி ப்ரொஃபசர், மகன் சயின்டிஸ்ட்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்த நிலையில் உலகின் வெற்றிகரமான கம்பியூட்டர் சயின்டிஸ்ட்-கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் அனிருத் தேவ்கன் மற்றும் அவருடை தந்தையின் மற்றும் தற்போது அனிருத் தேவ்கன் வாங்கும் சம்பளம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் முக்கிய பேசுப்பொருளாக உள்ளது,

கம்பியூட்டர் சயின்டிஸ்ட் ஆக விளங்கும் அனிருத் தேவ்கன் செப்டம்பர் 15, 1969 இல் இந்தியாவில் பிறந்தார். தற்போது இந்திய - அமெரிக்கராக இருக்கும் இவர் டெல்லி ஐஐடி கல்லூயில் பொறியியல் பட்டம் பெற்றார். இதன் பின்பு அமெரிக்காவில் இன்ஜினியரிங் குறிப்பாக கம்பியூட்டர் இன்ஜினியரிங் பிரிவுக்கு பெயர்போன கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் MS மற்றும் PHD முடித்தார்.

அனிருத் தேவ்கன் தற்போது கேடென்ஸ் டிசைன் சிஸ்டம்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் முக்கிய உறுப்பினராக அமர்ந்துள்ளார் Anirudh Devgan.

அனிருத் தேவ்கன் அமெரிக்கா செல்வதற்கு முன்பு தில்லியில் வசித்து வந்தார். அவருடைய தந்தை டெல்லி ஐஐடியில் கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியராக இருந்தார். இதன் வாயிலாகவே படிப்பில் ஆரம்பம் முதல் படுகெட்டியாக இருந்தார் அனிருத் தேவ்கன்.

கல்லூரி படிப்பை முடித்த உடன் அப்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருந்த ஐபிஎம் நிறுவனத்தில் தனது முதல் பணியை துவங்கினார். ஐபிஎம் நிறுவனத்தில் மட்டுமே அனிருத் தேவ்கன் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றியது மட்டும் அல்லாமல் ஐபிஎம் நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டு இருந்தார்.

ஐபிஎம் பணியை தொடர்ந்துமாக்மா டிசைன் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பொது மேலாளராகவும் உயர்ந்தார். இந்த நிலையில் அனிருத் தேவ்கன் 2012 ஆம் ஆண்டில் கேடென்ஸ் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக சேர்ந்து 2017 இல் நிறுவனத்தின் தலைவரானார்.

டாக்டர். அனிருத் தேவ்கன் ஒரு IEEE ஃபெலோ, DAC மற்றும் ICCAD ஆகிய இரு மாநாடுகளிலிருந்தும் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதுகள் உட்பட பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார், மேலும் 27 US காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

கேடென்ஸ் டிசைன் சிஸ்டம்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அனிருத் தேவ்கன் தற்போது வருடம் 265 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+