ஒவ்வொரு வீட்டிலும் இளவரசிகளாக இருக்கும் பெண் குழந்தைகள் என்றாலே அப்பாமார்களுக்கு அவ்வளவு சந்தோஷம். சொல்லப்போனால் பல ஆண்களும் தங்களது மனைவிகளின் மீது கொண்டுள்ள அன்பினை விட, பலமடங்கு அன்பை தங்களது மகள்கள் மீது கொண்டிருப்பார்கள்.
பெண் குழந்தைகள் என்றாலே அது வரம். ஒரு ஆண் தனது வாழ்க்கையில் நான்கு வடிவங்களில் தாயை சந்திக்கிறான் என்பார்கள்.
ஒன்று பெற்றெடுத்த அம்மா, இரண்டாவது தன்னுடன் பிறந்த அக்கா தங்கை, மூன்றாவது மனைவி. கடைசியாக அவர்களின் பெண் குழந்தைகள் என்பார்கள்.
செல்ல மகள்கள்
அதேபோலத் தான் பெண் குழந்தைகளும் தாய் என்ன தான் பாலூட்டி சோறூட்டி வளர்த்தாலும் அவர்கள் அதிகம் விரும்புவது தங்களது தந்தையை தான். சொல்லப்போனால் உலகில் அவர்களுக்கு மிக பிடித்தமான உறவு அவளின் அப்பாவாகத் தான் இருக்கும். தன்னுடைய நெருங்கிய தோழனாக, அன்புக்குரிய அப்பாவாக, கண்டிப்புடன் கூடிய ஆசிரியராக இப்படி எல்லாமுமாக இருப்பார்கள்.
வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு
பல பெண்களும் தாங்கள் அதிக நேரம் செலவழிக்க நினைப்பதும் தங்களுடைய அப்பாக்களுடன் தான். அம்மா என்னதான் பாசம் காட்டி வளர்த்தாலும், தங்களை தைரியமான பெண்ணாக வளர்ப்பது தந்தை தான். இப்படிப்பட்ட தந்தையின் சுக துக்கம் என அனைத்திலும் மகள்களின் பங்கு என்பது வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது.
அப்பா - மகள் பாசப்போராட்டம்
அப்படி இணையத்தில் பலராலும் ஈர்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாச போராட்டத்தினை பார்க்க முடிகிறது.
அந்த வீடியோவில் ஸ்விக்கியில் புதியதாக வேலை கிடைத்த தனது தந்தையினை கொண்டாடும் விதமாக, ஒரு சிறுமி தனது மகிழ்ச்சியினை அவரை கட்டியணைத்து வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனந்த கண்ணீர்
அந்த வீடியோவில் கண்ணை மூடிக் கொண்டுள்ள சிறுமியிடம் ஸ்விக்கியில் வேலை கிடைத்ததை உறுதிபடுத்தும் தந்தை, ஸ்விக்கியின் முத்திரை பதித்த ஒரு டீ சர்ட்டினையும் கையில் வைத்துள்ளார்.
அதனை பார்த்த அந்த குட்டி தேவதை தனது தந்தையை வாரிக் கட்டியணைத்து கொள்கிறார். மகிழ்ச்சியில் தனது கண்கள் கலங்கிய அந்த குட்டி பெண், துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதையும் காண முடிகிறது.
அதிர்ஷ்டமானவர்
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவினை பலரும் லைக் செய்து , தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சில பயனர்கள் நீங்கள் அதிர்ஷ்டமானவர். பெண் தேவதை உங்கள் வீட்டில் இருக்கிறாள் என கூறியுள்ளனர். பலரும் பாராட்டி வரும் இந்த வீடியோவினை பலரும் தொடர்ந்து ஹார்ட் மழையை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications