தற்போது வங்கிகளின் கடன் விகிதம் அதிகரித்து டெபாசிட் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக டெபாசிட்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு வங்கிகளும் தங்களுடைய பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. எனவே ஒரு முதலீட்டாளர் பிக்சட் டெபாசிட்களில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நிச்சயம் டெபாசிட் செய்பவருடைய வருமானம் அதிகரிக்கும். இந்த பதிவில் 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் தாங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனரோ அல்லது தங்கள் எந்த வங்கியில் நீண்ட காலமாக வங்கி சேவைகளைப் பற்றி வருகின்றனரோ அதே வங்கியைத் தேர்ந்தெடுத்து ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்கின்றனர்.

சில நேரங்களில் இதுபோன்ற சிறு விஷயங்களால் உங்களுடைய நீண்ட கால சேமிப்பிற்கு குறைந்த வருமானம் கிடைக்கலாம். எனவே எப்பொழுதும் இணையதளங்களை பயன்படுத்தி எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
வெவ்வேறு வங்கிகளிலும் வெவ்வேறு மாதிரியான திட்டங்கள் வழங்கப்படும். உதாரணமாக ஒரு சில வங்கிகளில் 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி இருக்கலாம். ஒரு சில வங்கிகளில் 2 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி இருக்கலாம். எனவே முதலீடு செய்யும் ஒருவர் இதைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI): பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்கள் ஆண்டுக்கு 7.30 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
HDFC பேங்க்: HDFC பேங்கில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 6.60 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓராண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்கள் 7.10 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
ICICI பேங்க்: ஐசிஐசிஐ பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.20 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
கோடக் மஹிந்திரா பேங்க்: கோடக் மகேந்திரா பேங்க் ஓராண்டுக்கு டெபாசிட் செய்பவர்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியைப் பெறலாம்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB): ஓராண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications