இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, வங்கிகளில் வழங்கப்படும் கடன்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 13.7 சதவீதமாக உள்ளது. அதேசமயம் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த வேறுபாடு காரணமாக டெபாசிட்டை அதிகரிக்க வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆர்பிஎல் பேங்க், மகாராஷ்டிரா பேங்க், ஃபெடரல் பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் உள்ளிட்ட பல வங்கிகள் ஏற்கனவே அதிக டெபாசிட்களை ஈர்ப்பதற்காக சிறப்பு வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
வங்கிகள் சிறப்பு FD திட்டங்கள்: ஃபெடரல் பேங்க் 400 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 7.35 சதவீத வட்டியும், 777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 7.40 சதவீத வட்டியும் வழங்குகிறது. மேலும் தனித்துவமான 50 மாத திட்டத்தை வழங்கும் சிறப்பு FDகளை ஃபெடரல் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள் இந்தத் திட்டங்களில் கூடுதல் 0.50 சதவீத வட்டிக்கு தகுதியுடையவர்கள். மேலும், 400 நாட்களுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 777 நாட்கள் மற்றும் 50 மாத கால FD திட்டங்களுக்கு 7.55 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
RBL பேங்க் "விஜய் டெபாசிட் திட்டம்" என்ற FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 500 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 8.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.60 சதவீதம் என்ற கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரா பேங்க் 777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் 400 நாட்களுக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பந்தன் பேங்க் 21 மாதத்திற்கு 8% வட்டி விகிதத்துடன் ஒரு சிறப்பு FD திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, HDFC பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற முக்கிய வங்கிகளும் சிறப்பு FD திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இது வங்கிகள் முழுவதும் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் போக்கைப் பிரதிபலிக்கிறது.
FD-களில் டெபாசிட் செய்ய விரும்புவோர், இந்த புதிய விருப்பங்களை ஆராயவும், வங்கிகள் வழங்கும் அதிக வட்டி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் இது ஒரு சிறந்த நேரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications