இந்தியா சீனா எல்லை பிரச்சனை தொடர்ந்து சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பல வகையில் இந்தியா தொடர்ந்து எடுத்து வரும் வேளையில், இதில் முக்கியமானதாக சீனா, இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வருடத்தில் மத்திய அரசு இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அனைத்து முதலீடுகளையும் சீனா மற்றும் ஹாங்காங் தொடர்புடையதா என்பதை தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி வருகிறது.
இப்படி இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பத்திருக்கும் 54 முதலீடுகளுக்கு எவ்விதமான முடிவுகளும் எடுக்காமல் வைத்துள்ளது மோடி அரசு.
சீனா
கடந்த ஆண்டு முதல் சீனாவிடம் இருந்து சுமார் 54 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் குறித்த விண்ணப்பங்கள் இந்திய அரசு பெற்றுள்ளது. அவை ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன்
மார்ச் 21, 2023 நிலவரப்படி சீனா / ஹாங்காங் நாடுகளில் இருந்து முதலீட்டாளர் / உரிமையாளரிடம் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் பெறப்பட்ட 54 FDI திட்டங்கள் அரசாங்கத்திடம் முடிவெடுக்க நிலுவையில் உள்ளன என்று சீதாராமன் திங்களன்று தெரிவித்தார்.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தி
சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை மேம்படுத்த சீன நிறுவனங்களுக்கு சில தளர்வுகள் உடன் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பாக்ஸ்கான், pegatron ஆகிய நிறுவனங்கள் தான் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
மத்திய அரசு கட்டுப்பாடு
இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று திட்டவட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
2020 ஆம் ஆண்டில், இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதட்டங்கள் அதிகரித்ததால், சீனாவிலிருந்து முதலீடுகளை தடுக்க இந்தியா பல வகையில் கட்டுப்பாடுகளை விதித்தது.
கொரோனா காலம்
அதுவும் முக்கியமாக கொரோனா காலத்தில் சீன நிறுவனங்கள் தனது பண பலத்தை பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களை கைப்பற்றி மிகப்பெரிய ஆதிக்கத்தை இந்திய சந்தையில் உருவாக்க திட்டமிட்டது. மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகள் மூலம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தப்பட்டது மட்டும் அல்லாமல் இந்திய நிறுவனங்களின் உரிமை காப்பாற்றப்பட்டது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!



Click it and Unblock the Notifications