டிரம்ப் ஈரான் மீதான ராணுவ தாக்குதல் கைவிடப்பட்டதாகவும், நிறுத்தப்பட்டதாகவும் வெளிப்படையாக அறிவித்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரான் எல்லையில் எவ்விதமான தாக்குதலும் இல்லாமல் அமைதிக்குத் திரும்பியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் தரப்பில் பல்வேறு அச்சுறுத்தல்கள் அமெரிக்காவுக்கும், அமெரிக்க அரசின் முக்கிய தலைவர்களுக்கும் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல்வேறு கிளர்ச்சியாளர்கள் படை ஏற்கனவே பல்வேறு Bounty-ஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு, அமெரிக்க நிதித்துறை அமைச்சரான ஸ்காட் பெசென்ட்-க்கும், அவரது குடும்பத்திற்கும் ஈரானுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள காரணமாகப் பாதுகாப்பான இடத்திற்கு குடும்பமாக இடம் பெயர்ந்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்க ஸ்காட் பெசென்ட் தனது வீட்டில் இருந்து குடும்பமாக வெளியேறி ராணுவத் தளத்திற்குத் தங்கி வருகிறார்.
இதுகுறித்து அமெரிக்க ஃபார்ஸ் நியூஸ் டிஜிட்டல் வெளியிட்ட செய்தியில் ஸ்காட் பெசென்ட் உயிர் மீதான அச்சுறுத்தல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் காரணத்தால் அவரும், அவருடைய குடும்பமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர் என டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதாக இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் ஸ்காட் பெசென்ட் குடும்பத்தின் இடம் மாற்றத்தை உறுதி செய்துள்ளது.
மேலும் எத்தகைய மிரட்டல் வந்தது, எத்தகைய ஆபத்து வருகிறது, தகவல் கொடுத்து யார் என்ற எவ்விதமான தகவலையும் டிரம்ப் நிர்வாகம் இதுவரையில் வெளியிடவில்லை. மேலும் ஈரான் தரப்பில் இருந்து தான் இந்த வார்னிங் வந்ததா என்பதையும் டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்யவில்லை.
ஆனால் ஈரான் மீதான அமெரிக்க அரசின் வர்த்தக தடைகள், வர்த்தக முடக்கம் சரியான முறையில் வேலை செய்யும் காரணத்தால் ஈரான் இந்த தடை உத்தரவுகளை உருவாக்கிய architect-ஐ ஈரான் டார்கெட் செய்வதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஃபாக்ஸ் நியூஸ் தளத்திடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈரான் மீது ராணுவ தாக்குதலை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட பின்பு, ஈரான் எல்லையைப் பகிரும் நாடுகளுடன் நிலம் வழியிலும், கேஸ்பியன் கடன் வழியாகவும் நடக்கும் வர்த்தகம், ஆயுத சப்ளை ஆகியவற்றைத் தடுக்க Operation Iron Gate என்ற திட்டத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான CENTCOM புதிதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

