உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முடிவுகள் வியாழக்கிழமை நள்ளிரவில் வெளியானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்த் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ஐ விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகித குறைப்பிற்கான வாய்ப்பு உள்ளதாக சில கணிப்புகள் வெளியானது. ஆனால் இக்கணிப்பை உடைக்கும் வகையில் ஜெரோம் பவல் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் பெடரல் வட்டி விகிதம் தொடர்ந்து 3.5% முதல் 3.75% வரம்பில் இருக்கும்.

பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக பெரோம் பவல் இக்கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொழிலாளர் சந்தையின் வலிமை மற்றும் பணவீக்கம் குறையும் வேகத்தை மதிப்பீடு செய்து நாணய கொள்கை குழு இந்த எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளது என விளக்கினார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.4%க்கு குறைந்துள்ளது. இதேவேளையில் வேலை உருவாக்கத்தில் சற்று பலவீனமாக இருக்கிறது, இதனால் வேலைவாய்ப்பு சந்தை இன்னும் இறுக்கமாக உள்ளது. பணவீக்கம் பெடரல் ரிசர்வ்-ன் நீண்டகால இலக்கை விட அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து வலிமையாக உள்ளது. இந்த கலவையான சிக்னல் மூலம் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது முக்கியமான முடிவாகும்.
இந்த முடிவு அரசியல் அழுத்தத்துக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தான் கூடுதல் முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெடரல் ரிசர்வ்-வையும், அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடன் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளதால் உடனடி மற்றும் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் கோரி வருகிறார்.
இதற்காக பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ஐ பகிரங்கமாக தாக்கி பேசியுள்ளார். இது பெடரல் ரிசர்வ்-ன் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்ற பீதி முதலீட்டு சந்தையில் அதிகமாகவே உள்ளது.
மேலும் ஜெரோம் பவல்-ன் பெடரல் ரிசர்வ் தலைவர் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. டிரம்ப் விரைவில் புதிய தலைவரை நியமிக்க உள்ளார். மேலும் பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை குழு-விற்குள்ளேயே வட்டி விகித குறைப்பில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் காரணத்தால், டிரம்ப் அவரின் கொள்கையை நம்பும் நபரை புதிய தலைவராக நியமித்தாலும், அவரால் பெரிய அளவிலான வட்டி குறைப்பை செய்வதை கடினம். அரசியல் அழுத்தம் இருந்தாலும், சிறிய அளவிலான குறைப்புகளை மட்டுமே முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications