அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் 0.75% வட்டி உயர்வு.. இந்தியாவுக்கும், இந்திய ஐடி துறைக்கும் என்ன பாதிப்பு..?

நவம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இக்கூட்டத்தில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு முதலீட்டுச் சந்தையிலும், நாணய மதிப்பிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில் இந்த வட்டி விகித உயர்வு மூலம் 83 ரூபாயை அளவீட்டைத் தாண்ட அதிக வாய்ப்பு உள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

கொரோனா பாதிப்பில் இருந்து வெளியில் வந்த உலகம் நாடுகளில் ரஷ்ய - உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகளின் தொடர் வட்டி விகித உயர்வு, பணவீக்கம், நாணய மதிப்பு சரிவு,வர்த்தக மந்த நிலை, வருவாய் சரிவு என உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதால் விரைவில் ரெசிஷன் உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்த ரெசிஷனில் அதிகம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் கூட்ட முடிவு

செப்டம்பர் கூட்ட முடிவு

செப்டம்பர் கூட்டத்தின் முடிவில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 2022 முடிவிற்குள் 1.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்திப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 4.25 - 4.50 சதவீதமாக நிலை நிறுத்த திட்டமிட்டது.

பணவீக்க இலக்கு

பணவீக்க இலக்கு

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நாட்டின் பணவீக்கத்தை 2 சதவீத அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கும் காரணத்தால் வட்டி விகித உயர்வில் எவ்விதமான பாரபட்சம் காட்டக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.

0.75 சதவீதம் வட்டி உயர்வு

0.75 சதவீதம் வட்டி உயர்வு

இதன் விளைவாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் நவம்பர் 2 ஆம் தேதி நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் வளரும் நாடுகளான இந்தியா போன்றவை அதிகம் பாதிக்கப்படும், சில நேரத்தில் மோசமாகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது. பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் சர்வதேச சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் வெளியேறும், அதிலும் குறிப்பாக அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றப்படும்.

நாணய சந்தை

நாணய சந்தை

பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் நாணய சந்தையும் பாதிக்கப்படும், இதன் வாயிலாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் சரியும். இந்திய ரூபாய் போலவே ஜப்பான் யென், சீனா யுவான், ஐரோப்பாவின் யூரோ, பிரிட்டன் பவுண்ட் ஆகிய நாணயங்களின் மதிப்பு சரிய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவு இறக்குமதியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், ஏற்றுமதியாளர்களுக்கு லாபமாக அமையும். இந்திய ஐடி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மென்பொருளுக்குக் கூடுதல் வருமானத்தைப் பெற்றாலும், அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஐடி சேவைக்குச் செலவு செய்வதைக் குறைக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பிய வர்த்தகம்

அமெரிக்கா, ஐரோப்பிய வர்த்தகம்

இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும், புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பெரும் சரிவு ஏற்படக் கூட வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை குறைந்தபட்சம் 50 சதவீத வர்த்தகத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா சந்தையைச் சார்ந்து வைத்துள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இப்படிப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் சர்வதேசச் சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் குறிப்பாகப் பங்குச்சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் வாயிலாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றும் போது ரூபாய் மதிப்ப 83 ரூபாய்க்கு மேல் சரியக் கூடும்.

பத்திர முதலீடுகள்

பத்திர முதலீடுகள்

இதைத் தாண்டி பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் அரசு பத்திர முதலீடுகள் மீதான லாபம் அதிகரிக்கும், இதனால் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி பத்திர சந்தை பக்கம் திரும்பும். நிலையான வட்டி வருமானம் கிடைக்கும் அரசு பத்திர முதலீட்டில் கூடுதல் வருமானம் கிடைக்கும் போது கட்டாயம் பங்கு முதலீடு வெளியேற்றப்படும்.

ஆசியச் சந்தை

ஆசியச் சந்தை

பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையின் டாவ் ஜோன்ஸ் சரிந்தது, இதே சரிவு ஆசியச் சந்தையிலும் இன்று எதிரொலிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வால் வீட்டுக்கடன் , வாகன கடனுக்கான வட்டியும் உயரும் என்பதால் இப்பிரிவு வர்த்தகமும் அதிகளவில் பாதிக்கும்.

 இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்கவே ஆர்பிஐ இன்று சற்றும் எதிர்பார்க்காத விதமாகக் கூடுதல் நாணய கொள்கை கூட்டத்தை நவம்பர் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தைக் காப்பாற்றக் கட்டாயம் பெரிய அளவிலான வட்டி விகித உயர்வு இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+