மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையிலும் கூட பல நிறுவனங்கள், வங்கிகள் டிசம்பர் காலண்டில் நல்ல லாபம் கண்டுள்ளன. இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கியான ஃபெடரல் வங்கி, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 32 சதவிகிதம் அதிகரித்து, 440.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 333.63 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ப்ளும்பெர்க் கருத்து கணிப்பில் மதிப்பிடப்பட்ட 412.7 கோடி ரூபாய் லாபம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 440.64 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகர வட்டி வருவாய் அல்லது கடன்களில் ஈட்டப்பட்ட வட்டி மற்றும் வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட்ட வட்டி ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, 7.21 சதவிகிதம் அதிகரித்து 1,154.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,077.29 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
முக்கிய கட்டணம் உள்பட மற்ற வருவாய் நிலவி வரும் மந்த நிலையிலும் கூட, மூன்று மாதங்களில் 18.03 சதவிகிதம் அதிகரித்து 407.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 345.55 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணம் வாராக்கடன் வீழ்ச்சியாகும். குறிப்பாக சொல்லப்போனால் டிசம்பர் காலாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2.99 சதவிகிதமாக இருந்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.07 சதவிகிதமாகவும், இதுவே முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.14 சதவிகிதமாகவும் இருந்துள்ளது கவனிக்கதக்கது.
இதே செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கி 51.58% நிகரலாபம் அதிகரித்து 425.34 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 280.61 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வட்டி வருவாய் 1,183 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12% அதிகமாகும்.
இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது 2.35% அதிகரித்து 93.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக பிஎஸ்யில் 94.45 ரூபாயாக இருந்துள்ளது. இதே குறைந்த பட்சம் 88 ரூபாயாகவும் இருந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications