சென்னை: பெடரல் பேங்க், ஸ்மைல்பே (SmilePay) என்ற புதிய பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேமெண்ட் முறையில் வாடிக்கையாளர்கள் அவர்களின் முக அடையாளத்தைப் பயன்படுத்தி எளிமையாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இத்தகைய பேமெண்ட்-க்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் போன் போன்ற எந்த கருவியும் தேவையில்லை.
பின்டெக் துறையில் சிறந்து விளங்கும் சீனாவில், ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் பின்டெக் சேவை பிரிவு அலிபே பல வருடங்களுக்கு முன்பே facial recognition அடிப்படையில் பேமெண்ட் செய்யும் முறையைக் கொண்டு வந்துள்ளது. இது சீனாவில் பல விமர்சனங்கள் உடன் வெற்றி நடைபோட்டு வரும் வேளையில் பெடரல் பேங்க் இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஸ்மைல்பே (SmilePay) என்றால் என்ன?: ஸ்மைல்பே (SmilePay) என்பது இந்தியாவில் முதல் முறையாக facial recognition அடிப்படையில் பணம் செலுத்தும் சேவையாகும், இது UIDAI இன் Bhim Aadhaar Pay பேமெண்ட் முறைக்கு மேல் முக அடையாளங்களைக் கொண்டு நிதி பரிமாற்றம் செய்யும் ஒரு தொழில்நுட்பம் என்று பெடரல் பேங்க் ஆகஸ்ட் 29, 2024 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்மைல்பே (SmilePay) பயனாளர்கள் தங்கள் முகத்தை ஸ்கேன் செய்து வங்கி தளத்தில் பதிவு செய்வதன் மூலம் எளிமையாகப் பணம் செலுத்த முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகள் அல்லது மொபைல் போன்கள் போன்றவை இல்லாமல் வியாபாரிகளிடம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த புதிய பேமெண்ட் முறையில், பண பரிவர்த்தனை இரண்டு படிகளில் முடிக்கப்படுகிறது.
ஸ்மைல்பே (SmilePay): பெடரல் பேங்க் முதல்கட்டமாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளது, இதற்கு வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரும் பெடரல் பேங்க்-ல் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பயன்படுத்த முடியாது.
பெடரல் பேங்க் விரைவில் இந்த சேவையைப் பிற வங்கிகளுக்கும், பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் போது பல கூட்டணிகளை இணைக்கும் திட்டமிட்டுள்ளது என்று பெடரல் பேங்க் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிதி பரிமாற்றம் பணத்தில் இருந்து கார்டுகளுக்கு மாறி, தற்போது QR கோடு-ல் இருந்து வியரபிள்-க்கு மாறி வரும் வேளையில், நடுவில் இந்த கௌசிக் வந்தா.. என்பது போல் முக அடையாளங்கள் வைத்து பேமெண்ட் செய்யும் புதிய முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் Svatantra Micro Finance ஆகியவற்றுடன் இணைந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட கிளைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் முதல்கட்ட சோதனைகளை பெடரல் பேங்க் செயல்படுத்தப்பட முடிவு செய்துள்ளது.
ஸ்மைல்பே (SmilePay) மூலம் பணம் செலுத்துவது எப்படி?: "வியாபாரிகள் தங்கள் மொபைலில் FED MERCHANT ஆப்-ல் தங்கள் பணம் செலுத்தும் முறையாக ஸ்மைல்பே (SmilePay) ஐ தேர்வு செய்ய வேண்டும்.
வியாபாரி, வாடிக்கையாளர் ஆதார் எண்ணை உள்ளிடுவதன் மூலம் FED MERCHANT APP மூலம் பணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்குவார். வியாபாரியின் மொபைலில் உள்ள கேமரா வாடிக்கையாளரின் முகத்தை ஸ்கேன் செய்து, UIDAI அமைப்பில் சேமிக்கப்பட்ட முக தரவுகளுடன் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்கப்படும்.
சரிபார்க்கப்பட்டவுடன், பணம் செலுத்தும் செயல்முறை உடனடியாக செயல்படுத்தப்படுகிறது, வாடிக்கையாளரின் ஆதார் இணைக்கப்பட்ட கணக்கில் இருந்து டெபிட் செய்யப்படும். பெடரல் பேங்க் உடன் இணைக்கப்பட்ட வியாபாரி கணக்கிற்கு பணம் டெபிட் செய்யப்படும்.
இது ஆரம்பக்கட்டம் என்பதால் இந்த செயல்முறை கடினமாக உள்ளது, இது நாளிடைவில் முகத்தை ஸ்கேன் செய்த பின்பு 4 இலக்க பாஸ்வோர்டு கொடுத்து பேமெண்ட் முடிக்கப்படும் வகையில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மைல்பே (SmilePay) இல் உள்ள வரம்பு என்ன?: ஆதார் இயக்கப்பட்ட பணம் செலுத்தும் அமைப்பு (AePS) மற்றும் BHIM Aadhaar Pay சேவைகளுக்கான நிலையான வரம்புகள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5,000 மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாதந்தோறும் ரூ. 50,000 ஆக தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications