அமெரிக்காவை தளமாக கொண்ட உலகின் முன்னணி தனியார் பங்கு நிறுவனமான பிளாக்ஸ்டோன் (Blackstone), ஃபெடரல் வங்கியில் கிட்டத்தட்ட 10 சதவீத பங்குகளை ரூ.6,196.5 கோடிக்கு வாங்க உள்ளது. கேரளா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட ஃபெடரல் வங்கியின் இயக்குநர் குழு, அன்று இந்த முதலீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் நிறைவடைய, பங்குதாரர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியப் போட்டி ஆணையம் (CCI) உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.
முதலீட்டின் பின்னணி என்ன..?: இந்த ஆண்டு, இந்திய வங்கிகள் பலவும் வெளிநாட்டு தனியார் பங்குகளை பெரிய அளவில் திரட்டுவதே இதற்கு காரணமாகும். கடந்த வாரம், ஆர்.பி.எல். வங்கியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ சேர்ந்த எமிரேட்ஸ் NBD சுமார் 60% பங்குகளை வாங்க ரூ.26,853 கோடி முதலீடு செய்ய முன்வந்தது.

முன்னதாக, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, வார்பர்க் பிங்கஸ் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் மூலமாகவும், யெஸ் வங்கி ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி வங்கியின் மூலமாகவும் பெரிய அளவிலான முதலீடுகளை பெற்றுள்ளன. இந்த நிகழ்வுகள், இந்திய வங்கிகளின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.
இதுகுறித்து மேக்வாரி (Macquarie) நிறுவனத்தின் சுரேஷ் கணபதி பேசுகையில், "இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கிக்கு இரு வழிகளிலும் பயனுள்ளதாக இருக்கும். இது நம்பகமான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு, அதிக நிதி வளம் கொண்ட முதலீட்டாளர்கள் வருவதால் நமது வங்கி அமைப்பு மேலும் வலுப்படும். மேலும், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றிற்காக வங்கிகளுக்கு பெருமளவு முதலீடு தேவைப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
ஃபெடரல் வங்கி, தனியார் ஒதுக்கீடு மூலம் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு சுமார் 27.3 கோடி பங்கு வாங்கும் உரிமைச் சான்றுகளை (வாரண்ட் - Warrants) வழங்குகிறது. ஒவ்வொரு வாரண்டுகளும் ரூ.227 என்ற வெளியீட்டு விலையில் வழங்கப்படும். இதில் ரூ.2 பங்கு முகமதிப்பாகவும், ரூ.225 பங்கு பிரீமியமாகவும் இருக்கும்.
இந்த வாரண்ட் பின்னர் ஒரு பங்காக மாற்றப்படலாம். முதலீட்டாளர் முதலில் மொத்த தொகையின் 25% மட்டும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வாரண்ட்டுகளை பங்காக மாற்றும் நேரத்தில் செலுத்த வேண்டும். வாரண்டுகளை 18 மாதங்களுக்குள் பங்காக மாற்ற வேண்டும். அந்த காலக்கெடுவுக்குள் மாற்றப்படாவிட்டால், அவை தானாகவே ரத்தாகி, முதலீட்டாளர் ஏற்கனவே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியாது.
இதுகுறித்து ஃபெடரல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே.வி.எஸ்.மணியன் கூறுகையில், "இந்த நிதி திரட்டல், வங்கியின் மூலதன இருப்பை (Capital Buffer) வலுப்படுத்தும். இதன் மூலம் வங்கி தனது சில்லறை வணிகம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் வணிகங்கள் ஆகியவற்றில் நடைபெறும் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த முடியும்" என அவர் கூறியுள்ளார்.
ஃபெடரல் வங்கி, தனது பங்குதாரர்களின் ஒப்புதலை பெறுவதற்காக நவம்பர் 19ஆம் தேதியன்று காணொலிக் காட்சி மூலம் ஒரு பொதுக்கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி வரை வங்கியின் பதிவுகளில் பங்குதாரர்களாக பெயர் பதிவு செய்யப்பட்டவர்கள், இந்த கூட்டத்துக்கான தீர்மானங்களில் மின்னணு வாக்களிப்பு மூலம் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.
சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் தற்போது அதிக மூலதனம், மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை உருவாக்க வேண்டிய தேவையில் உள்ளன. இதன் காரணமாக, இதுபோன்ற மூலதன ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்தத் தேவையை நன்கு புரிந்துகொண்டுள்ளது. நம்பகமான வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது, இந்திய வங்கி அமைப்பின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் சாதகமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications