அமெரிக்காவில் இரு வங்கிகள் அடுத்தடுத்து திவாலான நிலையில் அந்நாட்டின் மத்திய வங்கி நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்தாது என பலரும் கணித்த நிலையில் பெடர்ல் வங்கி தலைவர் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பக்கம் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது, மறுபக்கம் பெரிய டெக் நிறுவனகங்களின் 2வது ரவுண்ட் பணிநீக்கம், இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
பணவீக்கம் உயர்ந்த நிலையில் அதை கட்டுப்படுத்த வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டது, ஆனால் இதில் எதிர்பாராத விதமாக சிலிக்கான் வேலி வங்கி மாட்டிக்கொண்டு உள்ளது.
கடனுக்கான வட்டி
இந்த வட்டி விகித உயர்வின் மூலம் அமெரிக்காவில் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரக்கூடும், இது புதிதாக கடன் வாங்கி கார், வீடு, தொழில் துவங்க திட்டமிடுவோர் அனைவருக்கும் பெரும் சுமையாக உள்ளது. இதைவிட முக்கியமாக பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்துவது உறுதியாகியுள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி
பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகித உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்ட பின்பு சிலிக்கான் வேலி வங்கியின் நிர்வாகம் மிகவும் மோசமான நிர்வாக கட்டமைப்பை கொண்டுள்ளது, ஆனால் SVB bank-ன் வீழ்ச்சி அமெரிக்க வங்கியியல் அமைப்பின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை குறிக்காது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கை மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வங்கி திவால் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தாலும், பணிவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, இதனால் வட்டி விகித உயர்வை தவிர்க்க முடியாது என ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.
டாவ் ஜோன்ஸ்
இந்த நிலையில் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வால் டாவ் ஜோன்ஸ் 500 புள்ளிகள் சரிந்துள்ளது, இதன் எதிரொலியாக ஆசிய சந்தை அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால் இந்திய சந்தையில் கடந்த ஒருவாரமாக இருந்த நிலையற்ற தன்மை தொடரும் என்பது தான் உண்மை, பேங்க் நிஃப்டி குறியீடு மார்ச் 15 சரிவுக்கு பின்பு 2.42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் நிஃப்டி ஐடி குறியீடு 1.70 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை
அமெரிக்காவின் வர்த்தக நிலை இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை மொத்தமாக பாதித்தாலும் அமெரிக்க வங்கிகளின் திவால் இந்திய வங்கி பங்குகளை காட்டிலும் ஐடி நிறுவன பங்குகளை தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் BFSI பிரிவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகப்படியான வர்த்தகத்தை கொண்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் திவால் காரணமாக ஐடி நிறுவனங்களின் வர்த்தக வருமானம் பாதிக்கும் என்பது தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 283.29 புள்ளிகள் சரிந்து 57,931.30 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீடு 67.10 புள்ளிகள் சரிந்து 17,084.80 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications