உடுப்பி: FedEx பார்சல் மோசடிகள் தொடர்ந்து அப்பாவி மக்களை பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது இந்த பார்சல் மோசடிக்கு இரையாகி கர்நாடகா மாநிலத்தின் உடுப்பியைச் சேர்ந்த 33 வயது பெண் நம்ரதா, ரூ. 7.9 லட்சத்தை இழந்துள்ளார். மோசடி செய்தவர்கள் தங்களை FedEx அதிகாரிகள் மற்றும் மும்பை காவல்துறையினர் எனக் கூறி இவரிடம் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
FedEx மோசடி என்றால் என்ன?: அது என்ன ஃபெடெக்ஸ் மோசடி? என்று பல பேருக்கும் சந்தேகம் இருக்கலாம். ஃபெடெக்ஸ் என்பது ஒரு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள இம்போர்ட், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி வழங்கும் ஒரு நிறுவனமாக ஃபெடெக்ஸ் செயல்பட்டு வருகிறது. சரி ஃபெடக்ஸ் பார்சல் மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்.

முதலில் ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளைப் போல ஆழ்மாறட்டும் செய்து மோசடி செய்பவர்கள் ஒரு நபரை குறி வைத்து அவருக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் கூறுவார்கள். மேலும் போலி போலிஸ் அதிகாரிகள் போல நடித்து, எந்தவித வழக்கும் பதியப்படாமல் பார்சலை விடுவிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறு கேட்பார்கள்.
அதிலும் சிலர் பாதிக்கப்படும் நபரை Skype டவுன்லோட் செய்யும்படி கேட்டு, அதில் போதைப்பொருள் விசாரணை என்று கூறி ஆடைகளை களைய வைத்து, பணத்தை அபகரிக்கும் சம்பவங்களும் இதற்கும் முன்னால் நடந்துள்ளன.
33 வயது உடுப்பி பெண்ணின் வழக்கில் நடந்தது என்ன?: ஜூன் 22 அன்று, FedEx பிரதிநிதி என்று கூறி சஞ்சய் என்ற ஒரு நபரிடம் இருந்து நம்ரதாவுக்கு என்ற பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் "உங்களுடைய பார்சலில் இருந்து 5 ஈரானிய பாஸ்போர்ட், 5 டெபிட் கார்டுகள் மற்றும் 150 கிராம் MDMA போதைப்பொருள் உள்ளது" என சஞ்சய் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்பின் நம்ரதாவுக்கு ஒரு போலி காவல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது, அதில் அவர், காவல் நிலையத்திற்கு போக சொல்லி நம்ரதாவிடம் கூறியுள்ளார்.
இல்லையென்றால் skype மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். நம்ரதாவும் skype-பை தேர்வு செய்து, அதன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். உங்களுடைய தகவல்களை சரி பார்ப்பதற்கு ரூ. 7.9 லட்சத்தை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நம்ரதாவும் வேறு வழி இன்றி பணத்தை அனுப்பி உள்ளார்.
எந்த பார்சல் நிறுவனங்களில் இருந்து உங்களை தொடர்பு கொள்பவரும், உங்களுடைய விவரங்களை கேட்க மாட்டார்கள். அப்படி ஒரு வேலை உங்களிடம் கேட்டால் அவர்கள் மோசடி செய்பவர்களாக இருக்கலாம். மேலும் உங்களுடைய தகவல்களை சரி பார்ப்பதற்காக காவல்துறை எப்பொழுதும் உங்களிடம் பணம் கேட்காது. ஆகையால் பிறருக்கு அதிக அளவிலான தொகையை அனுப்பும் போது சற்று சிந்தித்து செயல்படுங்கள்.
கூடுதலாக, உங்களுக்கு வரும் அழைப்புகளின் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு Truecaller போன்ற கருவிகளைப் பயன்படுத்தவும், அதன் மூலம் ஆன்லைனில் நமக்கு வரும் அழைப்பை முழுமையாகச் சரிபார்க்க முடியும். நீங்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு நேரடியாக காவல் நிலையத்திற்கு செல்லுங்கள். மேலும் எந்த ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொண்டாலும், ஆன்லைன் மூலம் தீர்வை காண விரும்பாதீர்கள்.


Click it and Unblock the Notifications