தெலுங்கானாவில் சுமார் 10 வருடம் ஆட்சியில் இருந்து KCR தலைமையிலான BRS கட்சி நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி டிசம்பர் 7 பதவியேற்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இந்த ஆட்சி மாற்றம் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சி, ஐடி மற்றும் டெக் நிறுவனங்களின் வருகை, முதலீட்டு ஈர்ப்பு ஆகியவற்றில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெற்ற அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து சேவை நிறுவனமான FedEx தனது எக்ஸ்பிரஸ் சேவை பிரிவின் முதல் Advanced Capability Community (ACC) சென்டரை முதல் முறையாக ஹைதராபாத்-ல் செவ்வாய்க்கிழமை துவங்கியுள்ளது.
இதன் மூலம் தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆட்சிக்குச் சிறப்பான ஹெட்ஸ்டார்ட் கிடைத்துள்ளது. FedEx ஹைதராபாத்தில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது.
FedEx ACC ஆனது டெக் மற்றும் டிஜிட்டல் இன்னோவேஷன் மையமாகக் கருதப்படுகிறது, இது தெலுங்கானா அரசாங்கத்தின் தொழில்நுட்ப திறமைகளை வளர்ப்பதில் இணைக்கப்பட்டுள்ள திட்டமாகும். FedEx ACC திறப்பு விழாவில் FedEx கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் CEO ராஜ் சுப்ரமணியம் மற்றும் FedEx Express தலைவர் மற்றும் ஏர்லைன்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் CEO ரிச்சர்ட் ஸ்மித் ஆகியோரும் வந்தனர்.
தெலுங்கானாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு அனைத்து தரப்பினரும் அதிகப்படியான ஆர்வத்துடன் கவனிப்பது, ஐடி துறையின் வளர்ச்சியைத் தான். ஏற்கனவே அமேசான், மைக்ரோசாப்ட் ஆகியவை அலுவலகங்களை வைத்திருக்கும் வேளையில் சமீபத்தில் கூகுள் இந்தியாவில் மிகப்பெரிய கேம்பஸ் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.
இத்தகைய அறிவிப்புகளை நம்பி தான் மொத்த ஹைதராபாத்திலும் தற்போது ஆடம்பர ரியல் எஸ்டேட், வர்த்தக கட்டமைப்புகள் ரெடியாகி வருகிறது. டெக் நிறுவனங்களின் வளர்ச்சி தொய்வு அடைந்தால் கட்டாயம் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும். இது தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி-க்கு பெரும் சவாலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications