இந்தியாவின் முக்கிய பண்டிகை காலமான நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் எல்லாம் சிறப்பாக முடிந்து இருக்கிறது. இந்த பண்டிகை காலங்களில், பொருளாதாரத்துக்கு ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது என்றால் அது ஆட்டோமொபைல் விற்பனை அதிகரித்து இருப்பது தான்.
கடந்த 12 மாத காலமாக சரிந்து கொண்டு இருந்த விற்பனை இப்போது , கடந்த அக்டோபரில் தான் கொஞ்சம் தேறி இருக்கிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்கான சில்லறை வணிகம் நன்றாக நடந்து, ஆட்டோமொபைல் விற்பனை சரிவைக் குறைத்து இருக்கிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தங்களுடைய இந்த சில்லறை விற்பனையைப் பயன்படுத்தி, கூடுதலாக உற்பத்தி செய்து வைத்திருக்கும் வாகனங்களை சரி செய்து கொள்கிறது. அதாவது கரெக்ஷன் செய்து கொண்டிருக்கிறது. எனவே இனியாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சகட்டு மேனிக்கு தள்ளுபடி கொடுத்து தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற நிலை மாறும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது ஆட்டோமொபைல் துறை.
இந்த பண்டிகை கால விற்பனையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்றால்... இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனை தான் அதிகரித்து இருக்கிறது. வணிக வாகனங்களின் விற்பனையில் இந்த பண்டிகை கால செண்டிமெண்ட், எதிரொலிக்கவே இல்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. சொல்லப் போனால் வணிக வாகனங்களின் விற்பனை வழக்கம் போல சரிவைத் தான் சந்தித்து இருக்கின்றன.
பயணிகள் வாகனங்களின், அக்டோபர் 2019-ம் மாதத்துடன் அக்டோபர் 2018 விற்பனையை ஒப்பிட்டால் மாருதி சுசூகி மற்றும் ஹியூண்டாய் நிறுவன விற்பனை விவரங்கள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கின்றன. பயணிகள் வாகனங்களில் விற்பனை சரிவு 6 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் சுமார் 30 சதவிகிதம் விற்பனை சரிவைக் கண்டு கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகனங்களின் விற்பனையை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த அக்டோபர் 2018 உடன், அக்டோபர் 2019 விற்பனையை ஒப்பிட்டால் 15 சதவிகித சரிவைக் கண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய மாதங்களில் விற்பனை சரிவு 20 சதவிகிதமாக இருந்ததைப் பார்க்கும் போது இது ஓகேவாகத் தான் தோன்றுகிறது. ஏற்கனவே சொன்னது போல, வணிக வாகனங்களின் அக்டோபர் 2018 விற்பனை உடன் அக்டோபர் 2019eஐ ஒப்பிடும் போது வழக்கம் போல 56 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications