நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த ஆண்டும் முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட்கள், ஹோம் லோன்கள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகின்றன. அரசுக்கு சொந்தமான வங்கிகள் ஏற்கனவே தங்கள் சலுகைகளை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ள நிலையில் தனியார் வங்கிகளும் பண்டிகை காலத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட தயாராகி வருகின்றன.
இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளால் அறிவிக்கப்பட்ட சில பண்டிகைக் கால டீல்கள்:

ஐசிஐசிஐ பேங்க்: ஐசிஐசிஐ வங்கியின் வருடாந்திர ஃபெஸ்டிவ் பொனான்சா, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்கள், ஃபேஷன், நகைகள், ஃபர்னிச்சர், டிராவல்ஸ், இ-காமர்ஸ் மற்றும் டைனிங் ஆகியவற்றில் அதிக சலுகைகளை வழங்குகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், கார்ட்லெஸ் EMI ஆகியவற்றில் வழங்கப்டும் சலுகைகளைப் பயன்படுத்தி, ரூ. 40,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்" என்று ஐசிஐசிஐ வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ பேங்க் ஐபோன் 16 மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளுக்கும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. ஐசிஐசிஐ பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் தயாரிப்புகளில் உடனடி கேஷ்பேக் மற்றும் EMI வசதியையும் வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஐபோன் 16-இல் செய்யப்படும் கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பர்ச்சேஸ்களில் ரூ.5,000 வரை உடனடி கேஷ்பேக்கைப் பெறலாம். ஏர்பாட்களில் ரூ.1,500 வரையிலும், ஆப்பிள் வாட்ச்களில் ரூ.2,500 வரையிலும் உடனடி கேஷ்பேக் பெறலாம். இந்த டீல் டிசம்பர் 31, 2024 அன்று வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் "ஐபோன் ஃபார் லைஃப்" திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 2,497 ரூபாயில் தொடங்கி 24 மாத வட்டியில்லா தவணைகளில் பல்வேறு ஐபோன் மாடல்களை வாங்கலாம். இந்தச் சலுகை ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 பிளஸ் மற்றும் ஐபோன் 16 ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனை வழங்குகிறது: உங்கள் சிபில் ஸ்கோரின் அடிப்படையில் வீட்டுக் கடன் 8.35 சதவீத வட்டியில் தொடங்குகிறது. யூனியன் பேங்க் வீட்டுக் கடனுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. பண்டிகைக்கால சிறப்பு சலுகையாக ஹோம் லோன்களுக்கு செயலாக்கக் கட்டணங்கள் எதுவும் இல்லை.
ஆக்சிஸ் பேங்க்: ஆக்சிஸ் பேங்க், "தில் சே ஓபன் கொண்டாட்டங்கள்" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கியின் கிரெடிட் கார்டுக்கு இ-காமர்ஸ், லைஃப்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், டிராவல், டைனிங் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் தவிர, பேங்க் கிராப் டீல்ஸ் தளமான https://grabdeals.axisbank.com/ மூலம் 50+ பிராண்டுகள் மற்றும் இந்திய இ-காமர்ஸ் தளங்களில் கூடுதல் கேஷ்பேக் பலன்களைப் பெறலாம். அமேசானில் ஷாப்பிங் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் முன்னணி பிராண்டுகளுக்கு 25% வரை தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.
AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் சலுகையை "AU ஹார்ட் டு கார்ட்" என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 அக்டோபர் முதல் நவம்பர் 3 வரை வங்கிச் சேவைகள் மற்றும் ஷாப்பிங் வகைகளில் பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.
எலக்ட்ரானிக்ஸ் ஆர்வலர்கள் Croma, Realme, Reliance Digital, Vijay Sales மற்றும் vivo போன்ற பிராண்டுகளின் கேஜெட்டுகள் மற்றும் சாதனங்களுக்கு ரூ.7,500 வரையிலான சலுகைகளைப் பெறலாம்.
அதானி ஒன், கிளியர்ட்ரிப், ஈஸ்மைட்ரிப், கோய்பிபோ, இக்ஸிகோ, மேக்மைட்ரிப், பேடிஎம் விமானங்கள் மற்றும் யாத்ரா போன்ற தளங்கள் மூலம் பயணிகள் விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளில் 20% வரை தள்ளுபடி பெறலாம். BookMyShow, PVR INOX மற்றும் Paytm Movies மூலம் செய்யப்படும் டிக்கெட்டுகளில் 50% வரை தள்ளுபடி பெறலாம்.
கனரா பேங்க்: கனரா பேங்க் வீட்டுக் கடன்கள், தங்கக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. கனரா வங்கி வீட்டுக் கடன் 8.40% மற்றும் வாகனக் கடன் 8.70% மற்றும் தங்கக் கடன். பூஜ்ஜிய ஆவணங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் இல்லை.
கனரா பேங்க் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீத வட்டி விகிதமும், வாகனக் கடன்களுக்கு 8.70% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. ஆனால் இதற்கு எந்தவித செயலாக்க கட்டணங்களும் இல்லை.
பேங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால பரிசாக சிறப்பு 400 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்டை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.10% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.95 சதவீத வட்டியும், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.45 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications