இளைஞர்களே வண்டி இருந்தா போதும்.. சூப்பரான வேலை ரெடி.. இந்த வேலைக்கு செம டிமாண்ட் வேற..!!

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்த சில மாதங்களுக்கு ஒரே பண்டிகையாக தான் இருக்க போகிறது. பண்டிகை என்றாலே இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விற்பனை களைகட்டும்.

வீட்டு உபயோக பொருட்கள், துணிமணி, பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிக்கும். முன்பெல்லாம் மக்கள் கடைகளுக்கு நேரடியாக சென்று தான் பொருட்களை வாங்குவார்கள். ஆனால் இப்போது ஈ காமர்ஸ் மற்றும் குயிக் காமர்ஸ் தளம் இந்த வேலையை எளிதானதாக மாற்றிவிட்டன. அதாவது மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர்.

இளைஞர்களே வண்டி இருந்தா போதும்.. சூப்பரான வேலை ரெடி.. இந்த வேலைக்கு செம டிமாண்ட் வேற..!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு குயிக் காமர்ஸ் செயலிகளான இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிளிங்கிட் மற்றும் ஈ கமார்ஸ் தளங்களான அமேசான், மீஷோ, பிளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் விற்பனை களைகட்டும். எனவே அதற்கு ஏற்ப டெலிவரி வேலைக்கான ஆட்களின் தேவையும் அதிகரிக்கும். எனவே இந்த நிறுவனங்கள் தங்களது சேவையை துரிதப்படுத்தவும், வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்யவும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

பண்டிகை கால ஆர்டர்களை சமாளிப்பதற்காக, குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. எனவே பார்ட் டைம் வேலையாகவும் முழு நேரமாகவும் டெலிவரி வேலைக்கு செல்லும் நபர்களுக்கு இது வசந்த காலம் என்றே கூறலாம்.

வேலைக்கு ஆட்களை ஈர்க்கவும் போட்டியை சமாளிகக்வும் இந்த நிறுவனங்கள் கணிசமான சம்பளம் தரவும் தயாராகிவிட்டன. அந்த வகையில் நீங்கள் டெலிவரி வேலை தேடி கொண்டிருந்தால் இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வெறும் டெலிவரி ஊழியர்கள் மட்டுமல்லாது, தொழில்நுட்ப அறிவு கொண்ட நபர்களுக்கான தேவையும் இந்த துறையில் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் டேட்டா அனலிட்டிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மென்பொருள் கையாளுதல் மற்றும் டிஜிட்டல் தளங்களை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களை தேடி வருகின்றன.

இந்த பண்டிகை காலத்தில் மளிகை பொருட்கள் முதல் மின்னணு பொருட்கள் வரை அனைத்தையும் நிமிடங்களில் வீட்டு வாசலில் பெற மக்கள் விரும்புவதால், குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் விநியோக சங்கிலியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே இந்த துறை வேகமாக வளர்ந்து வருவதால், தற்காலிக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்த சீசன் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர உள்ளது.

இது நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குயிக் காமர்ஸ் மற்றும் ஈ காமர்ஸ் தளங்கள் அதிக விற்பனையை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளன என்பதால் அடுத்த பொங்கல் வரை டெலிவரி பார்டன்ர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+