தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்கள் தான் முதன்மை பங்கு வகிக்கிறது. பெரும்பாலான பலகாரங்களை செய்வதற்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்ததை விட பாமாயிலின் விலை, இந்த மாதம் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் வீடுகளை மட்டுமின்றி உணவகங்களையும் சேர்த்து பாதித்துள்ளது.
பல வீடுகளில் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெயின் விலை ஒரே மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், செப்டம்பரில் சில்லறை பணவீக்கம் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளரான இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாமாயிலின் இறக்குமதி குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் விலையாகும். சோயாபீன் எண்ணெய், பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை கடந்த மாதம் மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்துள்ளது.
சோயாபீன் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றின் இறக்குமதி வரியை 5.5 சதவீதத்திலிருந்தது 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான வரியை செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் 13.7 சதவீதத்திலிருந்து 35.7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் இந்தியாவில் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதன் காரணமாக பாமாயிலின் முக்கிய உற்பத்தியாளரான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் அதன் அளவு அதிகரித்துள்ளது. இது முக்கியமாக எதிர்காலத்தை பாதிக்கலாம்.
சோயாபீன் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றின் உலகளாவிய விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் 16.8 சதவீதம் மற்றும் 12.3 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா தனது சமையல் எண்ணெயின் தேவையில் சுமார் 58 சதவீதத்தை பிற நாடுகளின் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா தான் சமையல் எண்ணெயின் இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது. இறக்குமதி வரியை குறைப்பதற்கான வாய்ப்புகள் அரிதாக இருப்பதால் அடுத்த சில மாதங்களுக்கு நுகர்வோர் அதிக வேலையுடன் சமையல் எண்ணெய் வாங்க வேண்டியிருக்கும்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பலரும் முறுக்கு, அதிரசம், பாதுஷா, குலாப் ஜாமுன், சோமாசா போன்ற பலகாரங்களை செய்வதற்கு எண்ணையைப் பயன்படுத்தியாக வேண்டும். இந்தப் பண்டிகைக் காலத்தில் எண்ணெயின் விலை உயர்ந்து உள்ளதால் அது சாமானிய மக்களையும் பெரிதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல இந்த தீபாவளி பண்டிகைக்காக சீசன் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் இந்த விலை ஏற்றம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications