சென்னை: அமெரிக்காவை சேர்ந்த நிதி சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் (Fidelity Investments) நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய நிதி சேவை நிறுவனம் தான் ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட். 79 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அதிக மதிப்பிலான நிதியை மேலாண்மை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளை மேலாண்மை செய்வது மற்றும் பங்குச் சந்தை சார்ந்த தரகு நிறுவனமாகவும் இயங்கி வருகிறது.

இந்தியாவில் இந்த நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகத்தை நிறுவி இருக்கிறது . பெங்களூருவிலும் சென்னையிலும் இந்த நிறுவனத்தின் ஜிசிசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் இந்தியாவில் தங்கள் அலுவலகங்களில் சுமார் 500 பணியிடங்களை நீக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்து வருவதாகவும் இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் பணியிடங்களை குறைத்து இருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவ்வப்போது தங்கள் நிறுவன செயல்பாடுகளுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைப்போம் அதுதான் தற்போதும் நடந்திருக்கிறது என இந்த நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவில் தன்னுடைய ஜிசிசி மையங்களை பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஜிசிசி மையங்களில் 7000 பேர் வேலை செய்தனர். இதில் 500 பணியிடங்களை குறைத்து 6500ஆக மாற்றியுள்ளது. உலக அளவிலான இந்த நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் ஆய்வு & மேம்பாட்டு பணிகள் இந்த அலுவலகங்களில் நடைபெறுகின்றன.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நாங்கள் இயங்கி வருகிறோம் , இங்கே பெரிய அளவில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பது எங்களுக்கு விருப்பமில்லை என இந்த நிறுவனம் கூறி இருக்கிறது. உலகளவில் டெக், நிதி என பலதுறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் 160 நிறுவனங்கள் சுமார் 80000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 550 டெக் நிறுவனங்கள்1.5 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கின.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications