பிஃபா உலகக் கோப்பையில் ஒரு இருக்கைக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க கால்பந்து விளையாட்டானது பல நாட்டு இளைஞர்களால் விரும்பி விளையாடப்படும் ஒன்றாகும்.

 

இந்த கால்பந்து போட்டியினை உலகக் கோப்பை கால்பந்து தொடராக 1930ம் ஆண்டு உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டில் நடந்து வரும் உலகப் கோப்பை கால்பந்து தொடரானது, கத்தாரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. அதெல்லாம் சரி உலக கோப்பை கால்பந்து தொடருக்கும், இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது.

முகேஷ் அம்பானி லிவர்பூல் கால்பந்து அணியை வாங்குகிறாரா.. எவ்வளவு மதிப்பு தெரியுமா? முகேஷ் அம்பானி லிவர்பூல் கால்பந்து அணியை வாங்குகிறாரா.. எவ்வளவு மதிப்பு தெரியுமா?

பிரம்மாண்டமா அப்படி என்ன?

பிரம்மாண்டமா அப்படி என்ன?

பொதுவாக இதுவரையில் நடந்த போட்டிகளில் செலவு செய்ததிலேயே கத்தார் தான் அதிகளவில் பணத்தை வாரி இறைத்துள்ளது. உதாரணத்திற்கு கடந்த 5 போட்டிகளை எடுத்துக் கொண்டால், 2006 ஜெர்மனியில் நடந்த போட்டியின் மொத்த செலவு 5 பில்லியன் டாலர் தான். ஆனால் 2010ல் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் 3 பில்லியன் டாலரும், 2014ல் பிரேசிலில் நடந்த போட்டிக்கு 11.5 பில்லியன் டாலரும், 2018ல் ரஷ்யாவில் நடந்த போட்டிக்கு 11.7 பில்லியன் டாலரும் செலவிடப்பட்டது.

இது நடப்பு ஆண்டில் கத்தாரில் நடந்து வரும் போட்டியின் மொத்த செலவு மதிப்பு 220 பில்லியன் டாலராகும்.

ஸ்டேடியத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டேடியத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

இது மட்டும் தான் பிரம்மாண்டம் அல்ல, இந்த போடிகள் நடக்கும் ஸ்டேடியத்தின் மதிப்பு தான்.

2006ல் - ஜெர்மனியில் 1.75 பில்லியன் டாலராக இருந்தது

2010ல் - தென் ஆப்பிரிக்காவில் - 2 பில்லியன் டாலர்

2014ல் - பிரேசில் - 3.6 பில்லியன் டாலர்

2018ல் - ரஷ்யா - 3.45 பில்லியன் டாலர்

2022ல் - கத்தார் - 6.5 பில்லியன் டாலரில் இருந்து 10 பில்லியனாக செலவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்த போட்டிக்காக 7 ஸ்டேடியங்களை கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சராசரியாக ஒரு இருக்கைக்கான செலவு எவ்வளவு?
 

சராசரியாக ஒரு இருக்கைக்கான செலவு எவ்வளவு?

FIFAவின் அறிக்கையின் படி, சராசரியாக ஒரு இருக்கைக்கான செலவு

2006ல் - ஜெர்மனி - 275 750 டாலர்

2010ல் - தென் ஆப்பிரிக்கா - 400 - 900 டாலர்

2014ல் - பிரேசில் - 440 - 990 டாலர்

2018ல் - ரஷ்யா - 455 - 1100 டாலர்

2022ல் - கத்தார் - 604 - 1607 டாலர்

இதுவரை நடந்த போட்டிகளில் செலவினங்கள் அதிகம் என்ற நிலையில், சராசரி இருக்கை செலவும் கத்தாரில் அதிகரித்துள்ளது.

பரிசுத் தொகை எவ்வளவு?

பரிசுத் தொகை எவ்வளவு?


2006ல் - ஜெர்மனி - மொத்த பரிசுத் தொகை - 266 மில்லியன் டாலர் , வின்னருக்கு - 20 மில்லியன் டாலர்

2010ல் - தென் ஆப்பிரிக்கா - மொத்த பரிசுத் தொகை - 420 மில்லியன் டாலர் , வின்னருக்கு - 30 மில்லியன் டாலர்

2014ல் - பிரேசில் - மொத்த பரிசுத் தொகை - 576 மில்லியன் டாலர் , வின்னருக்கு - 35 மில்லியன் டாலர்

2018ல் - ரஷ்யா - மொத்த பரிசுத் தொகை - 791 மில்லியன் டாலர் , வின்னருக்கு - 38 மில்லியன் டாலர்

2022ல் - கத்தார் - மொத்த பரிசுத் தொகை - 440 மில்லியன் டாலர் , வின்னருக்கு - 42 மில்லியன் டாலர்

மொத்த பரிசுத்தொகை என்பது குறைவாக இருந்தாலும், வின்னர்களுக்கு அளிக்கப்படும் பரிசு என்பது நடப்பு ஆண்டில் அதிகம் ஆகும்.

FIFA-வுக்கு எவ்வளவு?

FIFA-வுக்கு எவ்வளவு?


FIFA-வுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு?

2006ல் - 2.2 பில்லியன் டாலர்

2010ல் - 3.2 பில்லியன் டாலர்

2014ல் - 4.8 பில்லியன் டாலர்

2018ல் - 5.35 பில்லியன் டாலர்

2022ல் - 7.5 பில்லியன் டாலர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: fifa world cup 2022
English summary

FIFA economics: fifa world cup the economics in the last 15 years

According to the report of FIFA, the average cost per seat in 2022 - Qatar - 604 - 1607 dollars.
Story first published: Thursday, November 24, 2022, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X