பணத்தை வாரியிறைத்த கத்தார்.. FIFA உலகக் கோப்பை 2022 பட்ஜெட்.. உலக நாடுகள் வியப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) ஈக்வடார் மற்றும் FIFA உலகக் கோப்பை 2022-ஐ நடத்தும் கத்தார் இடையே இரவு 9:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெற உள்ளது.

மத்திய கிழக்கு நாடான கத்தார் இதுவரையில் எந்தொரு விளையாட்டுப் போட்டிக்கும், நிகழ்ச்சிக்கும் செலவு செய்திடாத வகையில் FIFA உலகக் கோப்பை 2022-க்கு பார்த்து பார்த்து செய்துள்ளது.

இந்த FIFA உலகக் கோப்பை மூலம் கத்தார் உலக நாடுகளுக்கு ஒரு பென்சமார்க் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், வெளிநாட்டுப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காகவும் பணத்தை வாரி இறைத்துள்ளது.

தோள் கொடுப்பான் தோழன்.. பரிதவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ வந்த கத்தார் முதல் UAE வரை.. எப்படி? தோள் கொடுப்பான் தோழன்.. பரிதவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ வந்த கத்தார் முதல் UAE வரை.. எப்படி?

FIFA உலகக் கோப்பை

FIFA உலகக் கோப்பை

FIFA உலகக் கோப்பை போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டாலர்களைச் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. கத்தார் செய்த மொத்த செலவு, எதிர்பார்க்கப்படும் வருவாய் மற்றும் கத்தார் நாட்டின் பொருளாதாரத்திற்கு இப்போட்டி எவ்வளவு முக்கியம் தெரியுமா..?

நவம்பர் 20 முதல்

நவம்பர் 20 முதல்

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும், கால்பந்தின் மிகப்பெரிய போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடத்தப்படும். முதல் ஆட்டம் நவம்பர் 20-ம் தேதி கத்தார் மற்றும் ஈக்வடார் இடையே அல்கோரில் (Al Khor) உள்ள அல் பேட் மைதானத்தில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் ஸ்டேடியத்தில் (Lusail) அன்று நடைபெறும்.

32 நாடுகள்

32 நாடுகள்

2010ஆம் ஆண்டு 2022 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை போட்டி கத்தார் நடத்தும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, கத்தார் நடத்தும் 32 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, கால்பந்து மைதானங்களை மேம்படுத்துவதற்கு எனப் பெருமளவு செலவு செய்துள்ளது.

6 புதிய புட்பால் ஸ்டேடியம்

6 புதிய புட்பால் ஸ்டேடியம்

இந்தப் போட்டிக்காகக் கத்தார் 6 புதிய புட்பால் ஸ்டேடியங்களைக் கட்டியது மற்றும் ஏற்கனவே உள்ள இரண்டு மைதானங்களை, பயிற்சி தளங்களுடன் புதுப்பித்துள்ளது. இதற்கான ஆரம்ப ஏலத்தில் 4 பில்லியன் டாலரில் திட்டமிடப்பட்டது ஆனால் மொத்த செலவு 6.5 பில்லியன் டாலர் -10 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. , இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.

210 பில்லியன் டாலர்

210 பில்லியன் டாலர்


மீதமுள்ள சுமார் 210 பில்லியன் டாலரில் விமான நிலையங்கள், புதிய சாலைகள், ஹோட்டல்களுடன் கூடிய இன்னோவேஷன் ஹப் மற்றும் அதிநவீன நிலத்தடி போக்குவரத்து போன்றவற்றுக்குச் செலவு செய்துள்ளது. 2010 முதல் ஒவ்வொரு வாரமும் FIFA உலகக் கோப்பை 2022க்காகச் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்குமிட வளாகம்

தங்குமிட வளாகம்

தோஹாவில் 'தி பேர்ல்' என்று அழைக்கப்படும் தங்குமிட வளாகத்தைக் கட்டுவதற்குக் கத்தார் சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழிக்கப்பட்டது மற்றும் தோஹா மெட்ரோ அமைப்பு பல்வேறு சேவை மற்றும் மேம்பாடுக்காகச் சுமார் 36 பில்லியன் டாலர் செலவிட்டு உள்ளது.

பிற நாடுகள் செலவு

பிற நாடுகள் செலவு

கத்தார் 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ள நிலையில் 2018 இல் FIFA உலகக் கோப்பையை ஏற்பாடு செய்ய ரஷ்யா செலவிட்ட தொகை 11.6 பில்லியன் டாலரும், 2014 இல் பிரேசில் 15 பில்லியன் டாலர், 2010 இல் தென்னாப்பிரிக்கா 3.6 பில்லியன் டாலர், ஜெர்மனி 2006-ல் 4.3 பில்லியன் டாலர், 2002 இல் ஜப்பான் 7 பில்லியன் டாலர், 1998 இல் பிரான்ஸ் 2.3 பில்லியன் டாலர், 1994 இல் அமெரிக்கா 500 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

30 லட்சம் டிக்கெட்

30 லட்சம் டிக்கெட்

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இதுவரை 30 லட்சம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 2018ல் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை டிக்கெட் காட்டிலும் கத்தார் போட்டிகளின் டிக்கெட் விலை அதிகம். இறுதி போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை சராசரியாக 684 பவுண்டு அதாவது 66,200 ரூபாய்.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

மற்ற போட்டிகளை ஒப்பிடும் போது கத்தார் போட்டிகளின் ஒரு டிக்கெட் விலை 286 பவுண்ட், 2018 ரஷ்யாவில் நடந்த FIFA உலகக் கோப்பை போட்டியில் ஒரு டிக்கெட் விலை 214 பவுண்ட். கடந்த 20 வருடத்தில் கத்தார் டிக்கெட் தான் அதிகப்படியான விலை.

Qatar National Vision 2030 திட்டம்

Qatar National Vision 2030 திட்டம்

கத்தார் செலவு செய்த 220 பில்லியன் டாலர் தொகையில் சிறிய அளவிலான தொகை மட்டுமே பெற முடியும். ஆனால் கத்தார் நாட்டின் இந்த முதலீடு Qatar National Vision 2030 திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே என ரஷ்யாவுக்கான கத்தார் தூதர் ஷேக் அகமது பின் நாசர் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIFA World Cup 2022: Qatar Invested $220 Billion on Infra and others check ticket price

FIFA World Cup 2022: Qatar Invested $220 Billion on Infra and others check ticket price
Story first published: Saturday, November 19, 2022, 20:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X