பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவின் பங்குச் சந்தையின் பக்கம் யு டர்ன் எடுத்ததுதான். சீனாவின் பங்குகளில் ஏற்பட்ட உயர்வால் வெறும் 3 நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.31,000 கோடி மதிப்புள்ள பங்குகளை இந்தியாவில் விற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இந்திய பங்குச் சந்தையில் அவர்கள் விற்பனையை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம், இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் மற்றும் சீனா சந்தைக்கு மீண்டும் ஊக்கம் அளித்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தையில் சரிவிற்கு வலுவான காரணமாகின்றது. இந்த இரண்டு காரணங்களாலும், ஒரு வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் இந்தியாவில் இருந்து தங்கள் பங்குகளை கணிசமாகக் குறைத்துள்ளனர். அதன்படி மூன்றே நாட்களில் இந்திய சந்தையில் இருந்து ரூ.31,000 கோடியை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனப் பங்குகளின் சிறப்பான செயல்திறன் காரணமாக முதலீட்டாளர்கள் திடீரென அங்கு தங்களது முதலீடுகளை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 3 வரை, 30,718 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய பங்குகள் விற்கப்பட்டன
ஒரே மாதத்தில் சீன சந்தை 26% உயர்ந்தது:ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் தலைமை முதலீட்டு நிபுணர் டாக்டர் வி.கே. விஜயகுமார் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் ஹாங் செங் குறியீடு 26% உயர்ந்துள்ளது. மேலும் சீனப் பங்குகளின் மதிப்பீடுகள் மிகவும் குறைவாக உள்ளதாலும், சீனப் பொருளாதாரம் செயல்படுத்தி வரும் பணவியல் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளாலும் இந்தப் ஏற்றம் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதேபோல், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான புவிசார்-அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பு ஆகியவையும் முக்கிய பங்குகளாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் போர் அதிகரித்தால் கச்சா எண்ணெய் விலை உயரும்:சீனப் பங்குகளின் உயர்வு தொடர்ந்தால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் விற்பனையைத் தொடரலாம். அதேசமயம், இஸ்ரேல்-ஈரான் போர் முன்னேறினால், கச்சா எண்ணெய் விலையும் உயரலாம். இது இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், கோடக் செக்யூரிட்டிஸின் ஈக்விட்டி ரிசர்ச் தலைவர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் 57.5 ஆக இருந்த பிஎம்ஐ உற்பத்தி செப்டம்பரில் 56.5 ஆகவும், பிஎம்ஐ சர்வீசஸ் ஆகஸ்டில் 60.9 ஆக இருந்து 57.7 ஆகவும் பலவீனமடைந்ததாகவும், மத்திய அரசு 5MFY25 இல் ஆண்டுக்கு 1.2% செலவினம் குறைந்தது. இதன் ஆகஸ்ட் 2024 இல் GST வசூல் வளர்ச்சி 6.5% ஆண்டுக்கு குறைந்தது. எனவே, வெளிநாட்டு வரவுகள் மேலும் குறையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications