அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதற்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்றத்தில் முழக்கங்களுக்கு மத்தியில் 45 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றச்சில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் மானியக் மற்றும் செலவின கோரிக்கை நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள் 45 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நிதி மசோதா 2023 அதாவது பைனான்சியல் பில் 2023 மூலம் 2023-24 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதி அறிவிப்புகளை செயல்படுத்துவதக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலாகும். இதன் மூலம் பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்புகளில் இடம்பெற்ற வரி மாற்றங்கள், நிதி உட்செலுத்துதல் முதல் அனைத்தும் நடைமுறைக்கு கொண்ட அதிகாரம் வழங்கும்.
டெபிட் மியூச்சுவல் ஃபண்டு
டெபிட் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் மொத்த முதலீட்டு சொத்துக்களில் 35 சதவீதத்திற்கும் குறைவாக தொகையை பங்குகளில் முதலீடு செய்தால் நீண்ட கால வரிச் சலுகை பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு மியூச்சுவல் பண்டுகள் மீது குறுகிய கால மூலதன ஆதாய வரியை விதிக்கப்பட உள்ளது. இந்த நிதி மசோதா 2023 மூலம் நடைமுறைக்கு வருகிறது.
லோக் சபா
வியாழக்கிழமை லோக் சபாவில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவின திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை பைனான்சியல் பில் 2023 தாக்கல் செய்யப்பட்டு வாய்மொழி வாக்குகள் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆளும் கட்சி, எதிர் கட்சி
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதற்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதேபோல் பிஜேபி தரப்பினர் பிரிட்டன் நாட்டில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான capital investment-ஐ அறிவித்த நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தார்.
நிதி பற்றாக்குறை
இது மட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையில் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி பற்றாக்குறையை கடந்த ஆண்டின் 6.4 சதவீத்தை, இந்த ஆண்டு 5.9 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இந்த மாபெரும் பட்ஜெட் திட்டத்திற்கு பெரிய தொகையை கடன் வாங்கவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரி அறிவிப்புகள்
இந்த நிதி மசோதா 2023 மூலம் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தளர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதேபோல் அனைத்து வரி குறைப்பு, வரி உயர்வு அறிவிப்புகளும் நடைமுறைக்கு வர உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications