2024-25 நிதியாண்டிற்கான நிதி மசோதா 45 திருத்தங்களுடன் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி தொடர்பான முக்கியமான திருத்தம் இடம்பெற்றுள்ளது அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரியல் எஸ்டேட் முதலீட்டு மீதான நீண்ட கால மூலதன வரியை 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். ஆனால் இண்டக்சேஷன் சலுகையை நீக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் வரிச் சுமை அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, வரி செலுத்துபவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் 2 வரி விதிப்பு முறையிலும் வரியை செலுத்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2024 ஜூலை 23-க்கு முன்பு வாங்கிய சொத்துக்களுக்கு இண்டக்சேஷன் சலுகை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வரி செலுத்துபவர்கள் ரியல் எஸ்டேட் சொத்தை விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத்திற்கு புதிய வரிமுறையின் கீழ் 12.5 சதவீத தொகையை வரியாகவோ அல்லது பழைய திட்டத்தில் இண்டக்சேஷன் சலுகை உடன் 20 சதவீத வரியாகவோ செலுத்தலாம்.
இந்த முக்கியமான மாற்றம் உடன் சேர்ந்து லோக்சபாவில் 45 திருத்தங்களுடன் பட்ஜெட்-க்கு பின்பு நிதி மசோதா சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி இந்த மசோதா அடுத்து ராஜ்யசபாவிற்கு செல்லும், ஆனால் ராஜ்யசபாவிற்கு இந்த மசோதா-விற்கு மறுப்பு அதிகாரம் இல்லை. 14 நாட்களுக்குள் திருப்பி அனுப்பாவிட்டால் மசோதா நிறைவேறியதாகக் கருதப்படும்.
நடுத்தர வர்க்கத்திற்குப் பயனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் நிதி மசோதா சமர்ப்பிக்கப்படும் போது தெரிவித்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் மறுப்பு தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டனர்.
மேலும் நிதியமைச்சர் பேசுகையில், உதாரணமாக இந்த பட்ஜெட்டில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் நீண்ட கால மூலதன வரி விலக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்திற்குப் பயன் கிடைக்கும் என்றார்.
வரிச் சுமையை அதிகரிக்காமல் வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரியைக் குறைத்ததன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நிதி மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி,
2024 ஜூலை 23-க்கு முன்பு வீடுகள் வாங்கிய தனிநபர்கள் அல்லது ஹிந்து இணைப்பு குடும்பங்கள் புதிய திட்டத்தின் கீழ் 12.5 சதவிகித வரியை இண்டக்சேஷன் சலுகை இல்லாமல் கணக்கிடு செலுத்தலாம்.
இதேபோல் 2024 ஜூலை 23-க்கு முன்பு வீடுகள் வாங்கிய தனிநபர்கள் அல்லது ஹிந்து இணைப்பு குடும்பங்கள் பழைய திட்டத்தின் கீழ் 20 சதவிகித வரியை இண்டக்சேஷன் சலுகையுடன் சேர்த்துக் கணக்கிட்டு வரியைச் செலுத்தலாம்.
இதன் மூலம் மக்கள் தங்களுடைய ரியல் எஸ்டேட் சொத்து விற்பனையில் இரண்டில் எது குறைவான வரியாக சுமை கொண்டு உள்ளதோ அதை தேர்வு செய்து செலுத்தலாம். மேலும் இந்த சலுகை ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்யும் போது தான் பெற முடியும்.


Click it and Unblock the Notifications