மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி மசோதா 2025 தொடர்பான மக்களவை விவாதங்களின்போது, இந்த மசோதா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வரி நிவாரணத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டார். மேலும், தனிநபர் வருமான வரி வசூலில் 13.14% வளர்ச்சி காணும் என்ற கணிப்பு, உறுதியான தரவுகளின் அடிப்படையில் அறிவிப்பதாகவும் உறுதியளித்தார்.
2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, புதிய வருமான வரி சலுகையின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு, நிலையான வரி விலக்குடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.12.75 லட்சமாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

வருமான வரி சலுகை உயர்த்தப்பட்டது மூலம், 2026ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் மத்திய நிதியமைச்சர் தனிநபர் வருமான வரி வசூலில் 13.14% வளர்ச்சி காணும் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளார். இது எப்படி நடக்கும்..?
கடந்த சில ஆண்டுகளில் தனிநபர் வருமான வரி வசூல் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு வருகிறது என்றும், இது ஆண்டுக்கு சுமார் 20% அதிகரித்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
2025-26ஆம் நிதியாண்டில், தனிநபர் வருமான வரி வசூல் ரூ.13.6 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2024-25ஆம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.12.2 லட்சம் கோடியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டு உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
வரிச் சலுகை அதிகரிப்பால் ஏற்படும் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பைக் கணக்கிட்ட பிறகு, 2026ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வருவாயின் வளர்ச்சி 13.14% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி வசூல் கணிப்புகள் உறுதியான மற்றும் நம்பகமான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளியிட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வரி சலுகையை அதிகரித்துள்ளது ஒருபக்கம் இருந்தாலும், வருமான வரி தணிக்கை, முறைக்கேடா வருமான வரி தாக்கல், கூடுதலாக மக்களை வருமான வரி குடையின் கீழ் சேர்ப்பது போன்ற பல்வேறு வழிகளின் கீழ் அரசின் தனிநபர் வருமான வரி 12.75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வரி சலுகை அறிவித்த பின்பும் தனிநபர் வருமான வரி வருவாயின் வளர்ச்சி 13.14% ஆக இருக்கும் என கணித்துள்ளது மத்திய அரசு.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications