டெல்லி: 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட்டார்.
இதன்படி கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய கால கடன் வசதி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனானது 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். குறிப்பாக பிரதமர் கிரிஷி யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் மாவட்ட திட்டங்கள் என்ற ஒரு புதிய திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி மாநில அரசுகளோடு இணைந்து அந்தந்த மாவட்டங்களில் வேளாண் துறை மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறைந்த அளவு வேளாண் உற்பத்தி கொண்டிருக்கும் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களில் எல்லாம் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வேளாண் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதேபோல நீடித்த நிலைத்தன்மை கொண்ட வேளாண் நடைமுறைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வது, ஒரே வகையான பயிர்களை விளைவிப்பதை விடுத்து கால சூழலுக்கு ஏற்ப மாற்று பயிர்களை விதைப்பது என்பன உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்படும் என அவர் அறிவித்தார்.
ஆத்மநிர்பாரத் திட்டத்தின் கீழ் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான 6 ஆண்டு கால திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். துவரம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன் NAFED மற்றும் NCCF ஆகிய அரசு முகமைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக இந்த பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பீகார் மாநிலத்தில் மக்கானா வாரியம் நிறுவப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். உலகம் முழுவதும் தற்போது மக்கானாவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் பீகார் மக்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் கூறினார். மக்கானா உற்பத்தி, மதிப்பு கூட்டுவது, சந்தைப்படுத்துவது என அனைத்து உதவிகளையும் இந்த மக்கானா வாரியம் வழங்கும் என கூறினார்.
அதே போல பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோக திட்டம் கொண்டு வரப்படும் என கூறினார். அசாமில் யூரியா உற்பத்தி ஆலை கொண்டு வரப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தார்.
Story written by : Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications