கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் உடன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்டிங் செய்யாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கை டிஜிட்டல் முறையில் பெறச் சனிக்கிழமை நிதியமைச்சகத்தின் அல்வா நிகழ்ச்சியில் புதிய யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் செயலி
இந்தப் புதிய மொபைல் ஆப்-ல் மத்திய பட்ஜெட் குறித்த 14 அறிக்கைகள், வருடாந்திர நிதியியல் அறிக்கை, நிதியியல் அறிக்கை, டிமாண்ட் பார் கிரான்ட்ஸ் எனப் பலதரப்பட்ட அறிக்கைகளைப் பெறலாம். இதன் மூலம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பட்ஜெட்டிலும் புகுத்தப்பட்டு உள்ளது.
மொபைல் ஆப்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் பட்ஜெட் அறிக்கைகளை டவுன்லோடு செய்வது மட்டும் அல்லாமல் பிரிண்ட் செய்யவும் முடியும். இதோடு சர்ச், ஜூம் இன், ஜூம் அவுடன், ஸ்கோரிலிங் எனப் பயன்படுத்துவதற்கு எளிதான அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் இந்தச் செயலி தற்போது ஆன்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்திலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி
மேலும் இந்த மொபைல் செயலியில் பிப்ரவரி 1ஆம் தேதி 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் முடிந்த பின்பு அறிக்கைகள் மொபைல் செயலியில் வெளியிடப்படும்.
யூனியன் பட்ஜெட் இணையதளம்
இந்தச் செயலியை மத்திய பொருளாதார விவகார துறை அறிவுரையின் கீழ் நேஷ்னல் இன்பார்மேட்டிக்ஸ் சென்டர் அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். இது தான் இணையத் தள முகவரி ( www.indiabudget.gov.in).
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications