இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தனது 8-வது பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்கிறார். தற்போது சாமனியர்கள் முதல் பெரிய பிசினஸ் தலைகள் வரை நிர்மலா சீதாராமன் வெளியிடும் செய்திகளை நோக்கி உள்ளது. ஏனெனில் இவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும்? யாருக்கெல்லாம் நன்மை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்துள்ளது.
இந்த நேரத்தில், நிர்மலா சீதாராமனின் மத்திய அமைச்சர் என்பதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை, அவருடைய தற்போதைய சம்பளம், படிப்பு, நிகர மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து பார்க்கலாம். நிர்மலா சீதாராமன் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும், இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்திய வரலாற்றில் முழுநேர இலாகா ஒதுக்கப்பட்ட முதல் பெண்மணி என்பதால் அவர் நிதியமைச்சராக உயர்த்தப்பட்டது ஒரு வரலாற்று தருணம்.

நிர்மலா சீதாராமன் கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை:1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த சீதாராமன் இரயில்வே ஊழியரான நாராயணன் சீதாராமனுக்கும், இல்லத்தரசியான சாவித்திரிக்கும் பிறந்தவர் ஆவார். இவர் முசிறி, திருச்சிராப்பள்ளி, திருவெண்காடு, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் தமிழ் ஐயங்கார் பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவர்.
டாக்டர் சீதாராமனின் கல்விப் பயணம் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) வரை சென்றது. திருச்சிராப்பள்ளியில் உள்ள சீதாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், ஜேஎன்யுவில் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் எம்.பில் பட்டம் பெற்றார்.
அவர் தனது வருங்கால கணவர் பரகலா பிரபாகரை ஜேஎன்யுவில் சந்தித்தார். இருவருக்கும் மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள் இருந்தபோதிலும், 1986ல் பிஜேபியுடன் இணைந்த சீதாராமனுடன் பிரபாகர் மணமுடித்தார். அவர்களுக்கு பரகலா வாங்மாயி என்ற மகள் உள்ளார்.
நிர்மலா சீதாராமன் அரசியல் வாழ்க்கை:அவரது முந்தைய பதவியில், சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களில் ஈடுபட்டார். அவரது அரசியல் பயணத்தில் 2003 முதல் 2005 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்
நிர்மலா சீதாராமனின் நிகர மதிப்பு: 'Myneta.info என்ற இணையதளத்தின் படி, நிர்மலா சீதாராமனின் மொத்த சொத்து மதிப்பு 2,63,77,861 ரூபாய் ஆகும். இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. அவர் 315 கிராம் தங்கமும் 2 கிலோ வெள்ளியும் வைத்திருக்கிறார். சொந்தமாக, மாருதி சுசுகி டிசையர் ரூ.7,33,187 என்ற விலையிலும், ஹூண்டாய் ஐ10 ரூ.3,96,400 மதிப்பிலும் வைத்துள்ளார். பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் சீதாராமன் பெயரில் உள்ளது. ஐதராபாத் அருகே சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாயம் அல்லாத நிலம் அவருக்கு உள்ளது. அவரது அசையாச் சொத்தின் மதிப்பு 1,98,72,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.65,56,148 ரூபாய் தனிநபர் கடனாக உள்ளது.
அவர் தனது ராஜ்யசபா தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ரூ.43,500 ரூபாய் மதிப்புள்ள பணமும், ரூ.79,524 வங்கியில் நிலையான வைப்புத் தொகையும் இருப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல், எல்ஐசி போன்ற பிற காப்பீடுகளில் ரூ.4,43,500 இருப்பதாக கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றாக உயர்த்தப்பட்டு அவருடைய திறமை நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் அவரது பாதை அர்ப்பணிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவை அவரின் அரசியல் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
நிர்மலா சீதாராமன் 8-வது பட்ஜெட்: இதற்கிடையில், வரும் 1 பிப்ரவரி 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்துவார். இந்த எட்டாவது பட்ஜெட் உரையில், தொழில்துறையினர் மற்றும் வரி செலுத்துவோர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் வருமான வரிச் சலுகை, கேபெக்ஸ் புஷ், ஜிஎஸ்டி பகுத்தறிவு மற்றும் பல முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications