Finance Minister Pressmeet Live: 3வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் மீளும்.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க மத்திய அரசு ஒரு புறம் கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல புதிய திட்டங்கள் அடங்கிய இரண்டாம் கட்ட நிதி பேக்கேஜ் அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு இந்த நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளது.
Nov 12, 2020, 2:42 pm IST
விவசாய துறை மற்றும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க உரங்களுக்கு மானியம் கொடுக்க 65,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:39 pm IST
கொரோனா வேக்சின் சோதனைக்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர்.
ஆய்வு மற்றும் சோதனை பணிகளுக்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர்.
Nov 12, 2020, 2:35 pm IST
மூலதன சந்தை மற்றும் தொழிற்துறையை மேம்படுத்த 10,200 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:33 pm IST
இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க EXIM வங்கிக்கு IDEAS திட்டத்தின் கீழ் 3000 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ரயில்வே, மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், சர்க்கரை திட்டங்களும் இதில் அடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:30 pm IST
ஊரக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த PM Garib Kalyan Rozgar Yojana திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யபட உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:24 pm IST
பங்குசந்தை முதல் கடன் சந்தை தளமான NIIFல் மத்திய அரசு 6000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. NIIF ஏற்கனவே 8000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கும், 10,000 கோடி ரூபாய் திட்டங்களுக்கு வரும் காலத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசு தற்போது செய்யப்படும் 6000 கோடி ரூபாய் முதலீடு மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்பரா திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் அளவிற்கும் உயரும்.
Nov 12, 2020, 2:21 pm IST
ரியல் எஸ்டேட் துறை விற்பனையை அதிகரிக்க சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில அதிகரிக்கப்படுகிறது. இதனால் வீடு வாங்குவோரு்கு அதிகள வருமான வரி சலுகை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:16 pm IST
Pradhan Mantri Awas Yojana (PMAY) திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதி மூலம் ( 18,000 கோடி ரூபாய் ) புதிதாக 12 லட்சம் வீடுகள் கட்ட துவங்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கவும் முடியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:09 pm IST
Pradhan Mantri Awas Yojana (PMAY) திட்டத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம். 2020-21 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட இத்தொகை அதிகம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Nov 12, 2020, 2:06 pm IST
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த Production Linked Incentives திட்டத்தின் கீழ் 10 முக்கியமான துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் நன்மை அடையும்.
இதனால் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை மேம்படும்.
Nov 12, 2020, 2:02 pm IST
காமத் கமிட்டி ஆய்வின் படி பாதிப்பு அடைந்த 26 துறைகள் தேர்வு செய்யப்பட்டு அவசர கால நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது. அவசர கால நிதி திட்டத்தின் கீழ் ஒரு வருட கடன் சலுகையும் (moratorium), கடனை திருப்பி செலுத்த 4 வருட அவகாசமும் கொடுக்கப்பட்டது. தற்போது அவகாச காலம் 5 வருடமாக உயர்த்தப்படுகிறது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
Nov 12, 2020, 1:55 pm IST
Aatmanirbhar Bharat Rozgar Yojana திட்டத்தின் கீழ் மார்ச் 1 முதல் செப் 31 வரையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனங்களுக்கு (ஈபிஎப்ஓ கணக்கு அடிப்படையில்) 8300 கோடி ரூபாய் அளவிலான தொகையை 1,52,899 நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
Nov 12, 2020, 1:52 pm IST
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசரகால ஊக்க கடன் திட்டம் மார்ச்31, 2021 வரை தொடரும்.
Nov 12, 2020, 1:40 pm IST
ரூ.1,32,800 கோடி வருமான வரி ரீ-பண்ட் 39.7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்
Nov 12, 2020, 1:30 pm IST
அவசரகால கடன் திட்டம் மூலம் 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்.
61 லட்சம் பேருக்கு அவசரகால கடன் திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:29 pm IST
பொருளாதார ரீதியாக இந்தியா பெரிய அளவில் மீண்டுள்ளது - நிதியமைச்சர்.
இந்தியாவின் பங்கு சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:27 pm IST
கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்.
1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:22 pm IST
இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் - நிதியமைச்சர்.
பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:19 pm IST
பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது - நிதியமைச்சர்.
ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
28 மாநிலங்களில் இந்த திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:16 pm IST
வலுவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்கிறோம் - நிதியமைச்சர்.
பல்வேறு துறைகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய உள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது - நிதியமைச்சர்.
மார்க்கெட் தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:15 pm IST
2020-21 மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வரும் - நிதியமைச்சர்.
இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது - நிதியமைச்சர்.
Nov 12, 2020, 1:14 pm IST
பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அறிவுப்புகளை வெளியிட உள்ளேன் - நிதியமைச்சர்
Nov 12, 2020, 1:11 pm IST
பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் - நிதியமைச்சர்
Nov 12, 2020, 1:07 pm IST
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
Nov 12, 2020, 1:03 pm IST
இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார்
Nov 12, 2020, 11:42 am IST
ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத் தொகை அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Nov 12, 2020, 11:41 am IST
சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Share This Article
English summary
Nirmala Sitharaman Press Conference Today Live Updates in Tamil
FM nirmala sitharaman address a press conference at 12.30 pm
Story first published: Thursday, November 12, 2020, 13:20 [IST]