மும்பை: அதானி குழுமத்தின் மீதான நிதி முறைகேடு புகார் குறித்து இந்தியா கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீதான புகார் தொடர்பாக நமது நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள் வலிமையும், திறனும் உடையது. இதுபோன்ற விவரங்களை கையாளும் ஆற்றல் என்பது அவர்களுக்கு உள்ளது.
சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள்
அதோடு அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். இப்போது மட்டும் அல்ல, அவர்கள் எப்போதும் சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள் என தெரிவித்துள்ளார்.
ஆக விரைவில் இந்த நிதி குழுக்கள் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள முறைகேடு குறித்தான அறிக்கையை விரைவில் தெளிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி விலக்கு
புதிய வருமான வரி திட்டம் இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சம். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும்.
பட்ஜெட் 2023ல் 7 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு புதிய வருமான வரி திட்டத்தில் வரி இல்லை என்பது, சாமானிய மக்கள் மத்தியில் மிக நல்லதொரு விஷயமாகவும் பார்க்கப்பட்டது. இது சம்பளதாரர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி குறித்து கருத்து
டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோகரன்சிகள் 99% தொழில் நுட்பத்துடன் இணைந்த ஒன்றாகும்.இதற்கென ஒரு பொதுவான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த விதிமுறைகள் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் அளவில் தரமான ஒன்றாக இருக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா ஜி20 நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைப்புகள்
இந்தியாவின் ரிசர்வ் வங்கி, செபி மற்றும் ஐஆர்டிஏஐ, கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் உள்ளிட்ட, பல அமைப்புகளும் நிதி கண்காணிப்புகளை மேற்கொள்ள கூடியவை.
ஆக அதானி குழுமத்தின் மீதான முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் பலத்த குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதானி ஹிண்டர்ன்பர்க் சர்ச்சை
அதானி குழும நிறுவனங்களின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றசாட்டினை, அதானி குழுமம் தவறானது என்றும் இது ஆதாரமற்ற தகவல்கள் என்றும் விளக்கம் கொடுத்திருந்தது. எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டது.
விரைவில் தாக்கம் இருக்கலாம்
ஆக இது குறித்து இந்த நிதி அமைப்புகள் ஆராய்ந்து விரைவில் தங்களது முடிவினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது நிதி ரீதியாக மட்டும் அல்லாது, எதிர்கட்சிகளூம் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பானது வந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications