மறைமுகமாக சொன்ன நிர்மலா சீதாராமன்.. நல்ல செய்தி சொல்லுவாரா ரிசர்வ் வங்கி கவர்னர்?..

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வை அதிகரிக்கும் வகையில், வரி குறைப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்தால், அது வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு சரியான நேரம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுதவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி மிரட்டல் உலக சந்தைகளில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மந்தமடைந்துள்ளது. எனவே தற்போது கடனுக்கான வட்டியை ரிசர்வ வங்கி கவர்னர் மல்ஹோத்ரா கட்டாயம் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். வட்டியை குறைக்க வேண்டும் என்ற குரல் பலமான எழுந்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மறைமுகமாக சொன்ன நிர்மலா சீதாராமன்.. நல்ல செய்தி சொல்லுவாரா ரிசர்வ் வங்கி கவர்னர்?..

இந்த கூட்டத்தில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறைக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது நாளை காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிக்கையில் தெரிந்து விடும். ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது என்று 70 சதவீத பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று பேட்டி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி தானாகவே முடிவெடுக்கும். ரிசர்வ் வங்கி என்ன முடிவு எடுக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக, அதிக பணப்புழக்கம் கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் (ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு) உணரத் தொடங்கியுள்ளனர். மேலும் சமீப காலங்களில் அதற்காக அவர்கள் நடவடிக்கையும் எடுத்துள்ளனர். அதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்தால், கடன்தாரர்களின் வீடு, வாகன உள்ளிட்ட கடன்களின தவணை குறையும். இது அவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் 2024 டிசம்பரில் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றது முதல் இதுவரை அவர் பொதுவெளியில் பேசியது இல்லை. இந்நிலையில், நாளை நண்பகல் 12 மணிக்கு அவர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். முதல் முறையாக பேசும்போது மக்களுக்கு இனிப்பான (வட்டி குறைப்பு) செய்தியை சொல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+