டெல்லி: மத்திய நிதி நிலை அறிக்கையில் நகைகள் மீதான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் நகை கடைகளின் பங்குகள் 9% வரை உயர்வு கண்டன.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய நகைகள் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் நகை கடை நடத்துவோர் குறைந்த விலைக்கு நகைகளை இறக்குமதி செய்ய முடியும்.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நகை கடைகளின் பங்கு மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. பிஎன் காட்கில் நிறுவனத்தின் பங்கு நண்பகல் 2 மணி அளவில் 9% உயர்ந்து 615 ரூபாய் என வர்த்தகமானது. அதேபோல சென்கோ கோல்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5% உயர்ந்து 492 ரூபாய் என்றும் ,கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 2 சதவீதம் உயர்ந்து 3,584 ரூபாய் என்றும் வர்த்தகமானது. டைட்டன் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சுமார் மூன்று சதவீதம் வரை உயர்வு கண்டது.
நகைகள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைத்தது வரவேற்கத்தக்கது என காமா ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கோலின் ஷா தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற நகைகள் அதிகம் வாங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு உள்நாட்டில் நகை சந்தையை இன்னும் வலுவாக்கும் என தெரிவித்தார். அதேபோல பிளாட்டினம் பைண்டிங் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டதற்கு நன்றி கூறினார்.
அதே போல ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த சில கட்டுப்பாடுகளை மத்திய அரசின் நீக்கி உள்ளது. இதன் மூலம் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் எளிதாக இறக்குமதி செய்து நகைகளில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் உள்நாட்டில் இத்தகைய வைரங்களுக்கான தேவையும் விற்பனையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான அறிவிப்புகளை அரசு வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் நாட்டில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் சர்வதேச காரணிகளால் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இத்தகைய சூழலில் அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications