சாப்ட்ஜிபிடி மற்றும் டீப்சீக் போன்ற செயற்கை நுண்ணறிவு டூல்ஸ்-களை பயன்படுத்துவதை இந்திய நிதியமைச்சகம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு மத்தியில் லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 50% இணைய பயனர்கள் செயற்கை நுண்ணறிவு தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதில் சாப்ட்ஜிபிடி மிகவும் பிரபலமானது என தெரிய வந்துள்ளது. 90% செயற்கை நுண்ணறிவு பயனர்கள் டெக்ஸ்ட் அடிப்படையிலான தேடல் முறையை விரும்புவதாகவும், 10% பேர் மட்டுமே குரல் அடிப்படையில் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு வெளிட்டுள்ள ஆணையில் அலுவலகக் கணினிகளில் செயற்கை நுண்ணறிவு டூல்ஸ் மற்றும் செயலிகள் (சாப்ட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துவது அரசு தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் சாப்ட்ஜிபிடி இந்தியாவில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதா? என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. சாப்ட்ஜிபிடி இந்தியாவில் முழுமையாக தடை செய்யப்படவில்லை. இருப்பினும், தரவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதை அலுவலக கணினிகளில் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.
இதன் பொருள், அரசு ஊழியர்கள் அலுவலக கணினிகளில் சாப்ட்ஜிபிடியை அணுக முடியாது என்றாலும், பொது மக்கள் அதை தடையின்றி பயன்படுத்தலாம்.
இந்த தடையின் பொருள் என்ன?
இந்தியாவில் சாப்ட்ஜிபிடிக்கு எந்த "தடையும்" இல்லை. மக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வணிகம் உள்ளிட்டவற்றுக்கு அதை தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும், சில அரசு அலுவலகங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் தவறான பயன்பாடு குறித்த அச்சம் காரணமாகவே அரசு அதிகாரிகள் அதை அலுவலக கணினிகளில் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.


Click it and Unblock the Notifications