மத்திய அரசு வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் இந்திய மக்கள் தங்களது கிரெடிட் கார்டு-களை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூலிக்கும் (TCS) நடைமுறையை ஜூலை 1 முதல் நடைமுறைப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகப்படியான குழப்பம் நிலவியது. இதனால் வெள்ளிக்கிழமை காலையில் இரு முக்கியமான விஷயங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்பிஐ நிர்வாகம் செய்யும் LRS எனப்படும் Liberalised Remittance Scheme கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் அதாவது 250000 டாலர் வரையில் எவ்விதமான முன் அனுமதி இல்லாமல் பணம் வெளிநாட்டில் செலவு செய்ய முடியம்.
இந்த நிலையில் இந்தியர்கள் வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் போது செய்யப்படும் கிரெடிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் Liberalised Remittance Scheme கீழ் வராது. ஆனால் ஜூலை 1 முதல் இது அனைத்தும் LRS கீழ் வருவதால் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றமும் 250000 டாலர்குள் அடங்கும். அதேபோல் இதற்கு 20 சதவீதம் TCS - tax collection at source வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது நிறுவனங்கள் மத்தியிலும், வருமான வரி துறை வல்லுனர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக அஜய் ரோட்டி என்பவர் 20 சதவீத டிசிஎஸ் என்பது நாட்டின் Ease Of Doing Business அளவீட்டை பாதிக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பிஸ்னஸ் டிரிப் செய்யும் போது பெரும்பாலான செலவுகள் நிறுவன கணக்கு தொடர்புடைய கிரெடிட் கார்ட்டில் தான் செலவு செய்யப்படுகிறது. இதன் மூலம் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதேபோல் 20 சதவீத டிசிஎஸ் என்பது மிகவும் அதிகம் என அஜய் ரோட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகம் விளக்கம் : அஜய் ரோட்டி போன்று பலர் இதுக்குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்தது. (1) வெளிநாட்டுக்கு பிஸ்னஸ் டிரிப் செல்லும் போது ஒரு ஊழியர்கள் தன்னுடைய கிரெடிட் கார்ட் வாயிலாக செய்யும் செலவுகள் LRS கீழ் சேர்ககப்படாது. ஆனால் 20 சதவீதம் வரி TCS பொருந்தும். (2) இந்தியாவில் இருந்துக்கொண்டு ஒருவர் நெட்பிளிக்ஸ் பேமெண்ட், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சாப்ட்வேர் வாங்குவது போன்றவற்றின் செலவுகள் LRS கீழ் சேர்ககப்படாது. ஆனால் 20 சதவீதம் வரி TCS பொருந்தும் என தெரிவித்துள்ளது.
மேலும் கல்வி செலவுகளை வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாட்டில் பேமெண்ட் செய்யும் போது அதற்கு தற்போது இருக்கும் 0.5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கு 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு.
இதேபோல் சொந்த பணத்தை கல்விக்காக செலவிடும்ம் போதும் தற்போது இருக்கும் 5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கு 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு.
வெளிநாட்டில் மருத்து சிகிச்சைக்காக கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் போது தற்போது இருக்கும் 5 சதவீத TCS ஜூலை 1 ஆம் தேதி பின்பும் தொடரும். இதற்கும் 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு.
வெளிநாட்டு சுற்றுலா பேகேஜ் மற்றும் வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பேமெண்ட்-க்கு முன் 5 சதவீதம் வரையிலான TCS வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது, இதேபோல் இவ்விரு பிரிவுக்கும் எவ்விதமான நிதி கட்டுப்பாடும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. 20 சதவீத வரி விதிப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலக்கு வரும்.
மத்திய நிதியமைச்சகத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் LRS கீழ் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளியேறிய தொகை 22 சதவீதம் அதிகரித்து 24 பில்லியன் டாலராக உள்ளது. இதில் பெரும் பகுதி கிட்டதட்ட 60 சதவீதம் தொகை வெளிநாட்டு சுற்றுலா மற்றும் அதை சார்ந்த விஷயத்திற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே இதை குறைக்கவும், அதன் மூலம் செய்யப்படும் வரி ஏய்ப்பை தடுக்கும் அதேவேளையில் கூடுதல் வரி வருமானத்தை பார்க்கவும் இந்த 20 சதவீதம் வரையிலான TCS வரி விதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications