சென்னை: ஒட்டுமொத்த இந்திய மக்களும் இன்று மாலை வெளியாகும் எக்சிட் போல் முடிவுகளுக்காகவும், ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காகவும் காத்திருக்கும் வேளையில், மத்திய நிதி அமைச்சகம் பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
2024-25 ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சகம் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின் திட்டமிட்டபடி நடந்தால் ஜூலை 5 முதல் 15 ஆம் தேதிக்குள் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பதாலும், முழு நிதிநிலையில் அடுத்த ஐந்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்தும் உத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் முன்கூட்டியே நிதியமைச்சகம் பட்ஜெட் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் மாற்றங்கள் இருக்குமா?: வரி வருவாய் அதிகரிக்கும் போக்கைக் கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம்.
ஆனால் முழு பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கீடுகளில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், செலவுகள் அதிகமாகும் பட்சத்திலும், வருவாயில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்திலும் அதை அடுத்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சரிசெய்ய முடியும் வாய்ப்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காலத்தில் உள்ளது.
இந்திய அரசு உரம் மானியம் போன்ற சில முக்கியமான அரசு செலவினங்களுக்கு, நிதியாண்டின் தொடக்கத்தில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு இருந்தாலும், தேவைப்படும் அளவு நிதியை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. வருவாய் மூலம் ஈடுசெய்ய முடியாத நிதிப் பற்றாக்குறை இருந்தால், கூடுதல் நிதி கோரிக்கைகள் மூலம் அது சரி செய்யப்படும். இதேபோல், 100 நாள் திட்டத்தின் கீழ் வரும் கூடுதல் வேலைவாய்ப்புக்கான தேவைக்கும் இது பொருந்தும்.
2024-ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் அறிக்கையில் ஒரு முக்கிய மாற்றம் என்றால் ரிசர்வ் வங்கியின் கொடுத்துள்ள ஈவுத்தொகையான ரூ.2.11 லட்சம் கோடி தான், இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் இது ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மட்டுமே கணக்கிடப்பட்டது.
தற்போது கிடைத்துள்ள கூடுதல் வருவாய் அல்லது நிதி ஆதாரத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு, தனது கடனைத் தவணையை முன்கூட்டியே செலுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறை நிலையை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி அரசின் கடன் எவ்வளவு..?
கடன் சுமை: கடந்த டிசம்பர் மாதம், மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த அரசுக் கடன் நாட்டின் GDP-யில் சுமார் 81% ஆக உள்ளது. இந்த கடன் அளவு அடுத்த சில காலாண்டுகள் அல்லது வருடத்தில் குறையும் என்றும் மோடி தலைமையிலான அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2025-26 நிதியாண்டில் 4.5% என்ற நிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு எட்டும் வழியில் இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. 2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வட்டி செலவு மட்டும் ரூ.11.9 லட்சம் கோடி ஆகும், இது வருவாயில் கிட்டத்தட்ட 40% என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications