நம் நாட்டில் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. அதன்படி UIDAI அமைப்பு பெரும் வருமானத்திற்கு மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளது. ஆதார் திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) வருமானத்திற்கு 2027 முதல் 2028-ஆம் நிதியாண்டு வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து நிதி அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானியங்கள், ஆர்டிஐ கட்டணம், டெண்டர் கட்டணம், ஸ்கிராப் விற்பனையின் மூலம் பெறப்பட்ட தொகை, பிவிசி கார்டுக்கான கட்டணங்கள், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பான சேவைக் கட்டணங்கள், பிக்சட் டெபாசிட்கள், மற்றும் UIDAI ஈட்டிய வங்கி டெபாசிட்களுக்கான வட்டி ஆகியவற்றுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதிப்பீட்டு ஆண்டுகளான 2024 முதல் 2025, 2025 முதல் 2026, 2026 முதல் 2027, 2027 முதல் 2028 மற்றும் 2028 முதல் 2029 ஆகியவற்றிற்குப் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI அமைப்பு என்பது ஆதார் சட்டம், 2016-இன் விதிகளின் கீழ், ஆதார் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யவும்.. சட்டத்திற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்குவதற்கும் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையமாகும். இந்த அமைப்பு 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு மூலம் தான் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக 12 இலக்க எண்ணை கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு தனிப்பட்ட நபரிடம் இருந்தும் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுக் கொண்டு.. அதன் பின் ஒவ்வொருவரின் கைரேகை கருவிழி ஆகியவற்றை வைத்து தனிப்பட்ட ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வரிச் சலுகை தொடர்பான நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு UIDAI எந்த விதமான வணிக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி UIDAI அமைப்பு லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட வணிகம் போல் செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வகைகள் அதாவது அரசு மானியங்கள், கட்டணம் மற்றும் வட்டி போன்றவை வரி விலக்கு காலம் முழுவதும் சீரானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications