சிறு சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் வட்டி உயர்வு..!

ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதங்களையும், ஈஎம்ஐ தொகை கணக்கீட்டுப் பணிகளையும் தீவிரமாக்கியுள்ளது.

இதேவேளையில் ஆர்பிஐ அறிவிப்புக்குப் பின்பு சில வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ அறிவிப்பு வெளியாகி ஒரு வாரமான நிலையில் மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்படுகிறது.

மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் பல கோடி மக்கள் நன்மை அடைவார்கள்.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக உயர்த்திய நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய தபால் துறை

இந்திய தபால் துறை

மத்திய அரசு, இந்திய தபால் துறை மூலம் சுமார் 12 சிறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது.இந்த திட்டத்தில் சாமானிய நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம், வரிச் சேமிப்பு, நிலையான வருமானம் போன்ற பல காரணங்களுக்காகப் பல கோடி மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

மத்திய நிதி அமைச்சகம்

மத்திய நிதி அமைச்சகம்

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி-மார்ச் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத் திட்டங்கள்

முக்கியத் திட்டங்கள்


2022 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 30 ஆம் தேதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி), மாத வருமானக் கணக்குத் திட்டம் மற்றும் டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியது.

வட்டி உயர்த்தப்படவில்லை

வட்டி உயர்த்தப்படவில்லை

ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற பிற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இதனால் ஜனவரி-மார்ச் காலாண்டில் அனைத்து திட்டங்களுக்கும் அல்லது செப்டம்பர் 30ஆம் தேதி உயர்த்தபடாத திட்டங்களுக்கு மட்டும் உயர்த்தப்படலாம்.

முக்கியத் திட்டம்

முக்கியத் திட்டம்

ஜனவரி-மார்ச் காலாண்டில் மத்திய அரசு பின்வரும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகிறனர்

வைப்பு நிதி திட்டம்

வைப்பு நிதி திட்டம்


1 ஆண்டு நிரந்தர வைப்பு நிதி திட்டம்

5 வருட நிரந்தர வைப்பு நிதி திட்டம்

5 ஆண்டுத் தொடர் வைப்பு நிதி திட்டம்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம்

நாணய கொள்கை முடிவுகள்

நாணய கொள்கை முடிவுகள்

டிசம்பர் 5 ஆம் தேதி இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் SDF விகிதம் 6 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.5 சதவீதமாக உயர்த்துவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+