காசோலை குறித்த பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர மத்திய நித்யமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றது.
ஆக விரைவில் காசோலைகள் குறித்து விரைவில் கடினமான நடவடிக்கைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுதினமும் காசோலைகள் பவுன்ஸ் ஆவது குறித்து பல செய்திகளை படித்து வருகிறோம். என்ன தான் கட்டுப்பாடுகள் என்பது இருந்து வந்தாலும், மோசடிகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
மத்திய அரசின் திட்டம்
குறிப்பாக காசோலை குறித்த மோசடிகளில் பலவும் செக் பவுன்ஸ் குறித்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. காசோலை வழங்குபவரின் பிற கணக்குகளில் இருந்து பணத்தை கழிப்பது, இதுபோன்ற காரணங்களினால் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவதை தடுப்பது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.
பல பரிந்துரைகள்
மத்திய அரசின் இந்த திட்டமானது தொடர்ந்து காசோலை பவுன்ஸ்கள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய பரிசீலனைகளை செய்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய நிலையில், அந்த கூட்டத்தில் பல பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோசடிகள் குறையலாம்
இதுபோன்ற வழக்குகள் சட்டத்தின் மீதான சுமையை அதிகரிப்பதாகவும், எனவே இதனை தடுக்க சில பரிந்துரைகள் அந்த கூட்டத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் பணம் செலுத்துபவர்கள் காசோலைக்கு கட்டாயம் பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு கட்டாயம் தள்ளப்படுவர். கணக்கில் பணம் இல்லாமல் காசோலை கொடுக்கும் நடைமுறையை இது தடுக்க இது வழிவகுக்கலாம்.
செக் பவுன்ஸ்
காசோலை வழங்குபவர் பணம் செலுத்துவதற்காக வங்கியில் ஒரு காசோலையை வழங்கும்போது அது பணம் இல்லாமல் திரும்பும்போது செக் பவுன்ஸ் என்று கூறப்படுகிறது. சட்டப்பிரிவு 138ன் படி, செக் பவுன்ஸ் ஆனால், பணம் பெறுபவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதற்கு அபாரதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது.
PHDCCI-ன் கோரிக்கை
சமீபத்தில் செக் பவுன்ஸ் வழக்குகளில் காசோலை வழங்குபவர் தனது நடவடிக்கைக்கு பொறுப்பேற்கவும், சில நாட்களுக்கு பணம் எடுப்பதை கட்டாயமாக நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கையை எடுக்குமாறு phdcci அமைப்பு கோரிக்கை விடுத்தது. மேலும் செக் பவுன்ஸ் செய்த நாள் முதல் 90 நாட்களுக்குள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என PHDCCI கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications