நடந்து முடிந்த 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று வருமான வரி அனுமதி சான்றிதழ் தொடர்பான அறிவிப்பு. அதன்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு கருப்பு பணச் சட்டத்தின் கீழ் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் இடையே பெரும் விவாதம் எழுந்தது.
வெளிநாட்டு பயணங்களுக்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் என்ற பட்ஜெட் அறிவிப்பால் சமூக ஊடகங்களிலும் பல காரசாரமான கருத்துகள் பரவின. இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்வோர் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் 230-வது பிரிவின்படி, அனைத்து நபர்களும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டியதில்லை. சிலர் மட்டுமே இந்த சான்று பெற வேண்டியிருக்கும். அதன்படி ஒரு நபர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால், வருமான வரி சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைக்கு உட்பட்டிருந்தால் வரி சான்றிதழ் அவசியம்.
மேலும் ஒரு நபரின் மீது ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வரி பாக்கி இருந்தாலும் வரி அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த சூழ்நிலைகளில் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் நபர்கள் வரி அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டிய காரணங்களை பதிவு செய்து, பிரதான முதன்மை வருமான வரி ஆணையர் அல்லது முதன்மை வருமான வரி ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒரு நபருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரி சான்றிதழ் கேட்கப்படும் நபருக்கு எந்தவித வரி பாக்கியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரி அதிகாரிகள் இந்த சான்றை வழங்க வேண்டும்.
கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதிக வரி பாக்கி உள்ளவர்களுக்கு மட்டுமே வரி அனுமதி சான்றிதழ் தேவைப்படும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிக வரி பாக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் வகையிலும், இந்த அறிவிப்பு உள்ளது. மேலும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் நபர்களை கண்டுபிடிக்கவும் உதவியாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications