பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் சொத்துகள் மீதான மேற்பார்வையை கடுமையாக்கும் பொருட்டு, கிரிப்டோகரன்சி அல்லது விர்ச்சுவல் அசர்ட் சொத்துக்கள் மீது அரசு பண சலவை விதிகளை விதித்துள்ளது.
மத்திய நிதியமைச்கம் வெளியிட்ட கெஜட் அறிவிப்பில், பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளை கிரிப்டோ வர்த்தகம், கிரிப்டோ கரன்சி பாதுகாப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிதிச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அமைப்புகள் இனி சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் பற்றி இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு (FIU-IND) தெரிவிக்க வேண்டும். வங்கிகள் அல்லது பங்குத் தரகர்கள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களால் பின்பற்றப்படும் பணமோசடி மற்றும் பணசலவை விதிகளை இனி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அமைப்புகளும் கடைபிடிக்க வேண்டும்.
டிஜிட்டல் அசர்ட் தளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற உலகளாவிய போக்குக்கு ஏற்ப மத்திய நிதியமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் காகித பணத்திற்கு விர்ச்சுவல் கரன்சியாக மாற்றுவது, ஒன்றுக்கும் அதிகமான விர்ச்சுவல் கரன்சி விடிவங்களாக மாற்றுவது, விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை டிரான்ஸ்பர் செய்வது, விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாப்பது அல்லது நிர்வாகம் செய்வது போன்ற அனைத்தும் பண சலவை விதிமுறைகளுக்கு கீழ் அடங்கும் எந தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காயின்ஸ்விச் இணை நிறுவனர் அசிஷ் சிங்ஹால் தனது டிவிட்டரில் மத்திய நிதியமைச்சகம் டிஜிட்டல் சொத்துகள் மீதான மேற்பார்வையை கடுமையாக்கும் பொருட்டு, கிரிப்டோகரன்சி அல்லது விர்ச்சுவல் அசர்ட் சொத்துக்கள் மீது அரசு பண சலவை விதிகளை விதித்துள்ளது மூலம் இத்துறையை அங்கிகரித்துள்ளது.
ஏற்கனவே மத்திய நிதியமைச்சகம் கிரிப்டோகரன்சி முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு அதிகப்படியான வரியை விதித்துள்ள காரணத்தால் இப்பிரிவில் முதலீடுகள் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications