சென்னை: தமிழ்நாடு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் வியட்நாமை பின்பற்றி தமிழ்நாடு அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிதி திட்டமிடல் நிபுணரான முத்துகிருஷ்ணன் எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் வியட்நாம் மற்றும் தமிழ்நாடு இடையிலான ஒற்றுமைகளையும் எந்தெந்த பிரிவுகளில் எல்லாம் தமிழ்நாடு அரசு வியட்நாமை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாடு மக்கள் தொகை 8 கோடி, வியட்நாம் மக்கள் கோடி 10 கோடி, தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி 378 மில்லியன் டாலர்கள், வியட்நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி-இன் மதிப்பு 406 பில்லியன் டாலர்கள்.

தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 4224 டாலர்கள், வியட்நாமில் தனிநபர் வருமானம் 4623 டாலர்கள். மனித வள மேம்பாட்டு குறியீடு தமிழ்நாடில் 0.738 வியட்நாமில் 0.726 என்ற அளவில் இருக்கிறது என முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார். வியட்நாமையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பார்த்தால் வியட்நாம் மக்கள் தொகை இந்தியாவை விட சற்று அதிகம், மற்ற விஷயங்கள் பெருமளவில் ஒத்து போகின்றன.
வியட்நாம் பல்வேறு சவால்களைக் கடந்து பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு தன்னுடைய தொழில் முயற்சிகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பிரதான நகரங்களை சர்வதேச தரத்தில் மாற்ற வேண்டும் , இதைத்தான் வியட்நாம் தற்போது செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் வியட்நாம் தமிழ்நாட்டை விட சற்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முத்துகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு வியட்நாமை பின்பற்றி சில மாற்றங்களை கொண்டு வந்தால் இன்னும் வேகமான வளர்ச்சி அடைய முடியும் என கூறியுள்ளார்.
வியட்நாம் அண்மை காலமாக அனைவருக்கும் பிடித்த சுற்றுலா தளமாக மாறி இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாடு வியட்நாமை போலவே அழகிய கடற்கரைகள் மற்றும் பாரம்பரிய கோயில் தலங்களை கொண்ட ஒரு மாநிலம் எனவே சுற்றுலா துறையை இன்னும் மேம்படுத்தினால் நிச்சயமாக நம்முடைய பொருளாதார வேகமான வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வியட்நாம் சென்று அங்கே என்னென்ன மாதிரியான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பார்த்து அவற்றை தமிழ்நாட்டிலும் கொண்டு வரும்போது நிச்சயம் தமிழ்நாட்டு பொருளாதாரம் வளர்ந்த பொருளாதாரமாக மாறும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் , எனவே தமிழ்நாடு அரசு இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு போட்டி போடாமல் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தோடு போட்டி போட தொடங்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
story written: devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications