இந்திய அரசு நாட்டு குடிமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது. அதன்படி 60 வயதிற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற விரும்பும் தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் தான் "அடல் பென்ஷன் யோஜனா - (APY)" என்ற திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால்.. இந்த திட்டம் எப்படி வேலை செய்கிறது? மற்றும் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?: அடல் பென்ஷன் யோஜனா என்பது ஓய்வூதிய திட்டம் ஆகும். இது தனி நபர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட பென்ஷன் திட்டம். இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. பணியில் இருக்கும் போது பெறப்படும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்வதன் மூலம் 60 வயதை கடந்த பிறகு மாதம் மாதம் ஓய்வூதியம் பெறலாம்.

யார் முதலீடு செய்யலாம்?: 18 முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்களுக்காக இந்தத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பிற்குள் உள்ள எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தகுதி பெறலாம். தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் என எங்கு வேண்டுமானாலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கணக்கைத் தொடங்கலாம். முன்பெல்லாம் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க அரசு பணியில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசு வேலைகளில் இல்லாத ஊழியர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?: ஓய்வூதியத்தின்அளவு இந்தத் திட்டத்தில் சேரும்போது உங்கள் வயது மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து அமையும். உதாரணமாக நீங்கள் 18 வயதாக இருக்கும் போது மாதம் ரூ.210 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் திட்டத்திற்காக தினமும் 7 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு 210 ரூபாய். இதைத் தொடர்ந்து முதலீடு செய்தால் உங்களுக்கு 60 வயது ஆகும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ.5000 ரூபாய் கிடைக்கும். இந்த ஓய்வூதியத்திற்கு தகுதி பெற தொடர்ந்து நீங்கள் 20 வருடங்கள் வரை முதலீடு செய்ய வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். அந்த அட்டவணையில் உங்களுடைய வயது, எத்தனை வருடங்கள் முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் மாத மாதம் முதலீடு செய்யலாம், விருப்பப்பட்டால் காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்ய முடியும்.

மாதம் குறைந்த முதலீட்டு தொகையாக வெறும் 42 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்யலாம். மாதம் 42 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் 60 வயதிற்கு பிறகு 1000 ரூபாய் பென்ஷன் ஆக கிடைக்கும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைவது எப்படி?: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைவது ஒரு எளிய செயல்முறை. விண்ணப்பப் படிவத்தை பெற உங்கள் வங்கி கிளைக்கு செல்லலாம். படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் பங்களிக்க விரும்பும் தொகையை தேர்வு செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்படும். 60 வயதை அடைந்த பிறகு உங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தனி நபர்கள் தங்களுடைய நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் ஓய்வு பெறும் ஆண்டுகளில் நிலையான வருமானத்தை பெறுவதற்கும் நம்பகமான வழியாக APY உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications