சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எதிர்காலத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பில்லை என்பதால், பல முதலீட்டாளர்களும் அதிக FD விகிதங்களைத் தரும் வங்கிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்தில், யெஸ் பேங்க் அதன் FD வட்டி விகிதங்களில் மாற்றம் செய்தது. மேலும் SBI கடந்த மாதம் FD வட்டி விகிதங்களில் திருத்தங்களைச் செய்தது. முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் HDFC பேங்க், SBI பேங்க், யெஸ் பேங்க், ICICI பேங்க் மற்றும் கனரா பேங்க் போன்ற முக்கிய பேங்குகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
SBI FD வட்டி விகிதங்கள்: SBI பேங்க், 46 நாட்கள் முதல் 179 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தி, பொது வாடிக்கையாளர்களுக்கு 4.75% முதல் 5.50% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 6% ஆகவும் உயர்த்தியுள்ளது.

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு , பொது வாடிக்கையாளர்களுக்கு 5.75% முதல் 6% வரை வட்டி வழங்கப்படுகிறது. 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் FD டெபாசிட்டுகளுக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 6% முதல் 6.25% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 6.50% முதல் 6.75% ஆகவும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகபட்ச வட்டி விகிதம் 7.10% மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
யெஸ் பேங்க் FD வட்டி விகிதங்கள்: யெஸ் பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 3.25% முதல் 8% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 8.50% வரையிலான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.50% என்ற அதிகபட்ச விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
ICICI பேங்க் FD வட்டி விகிதங்கள்: ICICI பேங்க் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 3% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, 3.50% முதல் 7.75% வரை வழங்கப்படுகிறது. 15 மாதங்கள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
HDFC பேங்க் FD வட்டி விகிதங்கள்: HDFC பேங்க் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 3.5% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான வட்டி விகிதங்கள் 7% முதல் 7.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, 3.5% முதல் 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.
Axis பேங்க் FD வட்டி விகிதங்கள்: ஆக்சிஸ் பேங்க், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான, ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 3% முதல் 7.20% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, 3.50% முதல் 7.85% வரை வட்டி வழங்கப்படுகிறது.
கனரா பேங்க் FD வட்டி விகிதங்கள்: கனரா பேங்க் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 4% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, 4% முதல் 7.75% வட்டி வழங்கப்படுகிறது. 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FD திட்டத்திற்கு அதிகபட்ச விகிதமாக 7.25% வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications